நீரிழிவு நரம்பியல்

நீரிழிவு நரம்பியல் (Diabetic neuropathy) என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய நரம்பின் உட்சுரப்பு சேதப்படுவதால் ஏற்படும் கோளாறு ஆகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனைக்கட்டுப்படுத்தாமல் விடும்பட்சத்தில் இந்நோய் அதிகரிக்கிறது. குருதியின் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதபோது அதன் அளவு அதிகரித்து குருதிக்குழல் பகுதியில் சார்பிட்டால் என்னும் வேதிப்பொருளாக மாற்றம் அடைந்து ரத்தகுழாயின் உட்பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. பின்னர் இது இலைகளைத்தின்னும் பூச்சிகளைப்போல் நரம்பிழைகளை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக நரம்புத் தொகுதியின் வழியாக கடத்தப்படும் தகவல் பரிமாற்றம் தடைபடுவதோடு, நுண்ணிய ரத்தகுழாய்களும் பாதிக்கப்பட்டு நரம்பின் கடைசிப்பகுதிக்கு சத்தும் கிடைக்காமல் ஆக்சீசன் தடைப்படுகிறது. மேலும் நுண் இரத்த ஊட்டம் பாதிக்கப்படுவதால் விழித்திரை[1] , சிறுநீரகம்[2], மற்றும் நரம்பு மண்டலம்[3] ஆகியவை எளிதாக பாதிக்கப்படுகிறது.

Diabetic neuropathy
சிறப்புஉட்சுரப்பியல்


நோயறிதல்

நீரிழிவு வெளிப்புற நரம்பியல் குறைபாடானது நீரிழிவு குறைபாடுள்ளவர்களின் நோய் வரலாறு மற்றும் சில உடல் பரிசோதனைகள் மூலம்  கண்டறியலாம். இந்த பரிசோதனையானது பாத வலி மற்றும் உணர்வின்மை குறையுள்ள நீரிழிவு குறைபாடுள்ளவர்களின் பாத பரிசோதனைகள் மற்றும் நோய் குறைபாட்டின் வரலாற்று நிலைப்பாட்டினையும் கொண்டு கருத்தில் கொள்ளப்படுகிறது. உடல் பரிசோதனைகள் பாத உருமாற்றம், ஆறாத புண் மற்றும் கணுக்கால் அனிச்சை குறைபாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம். மனித நரம்பியலில் பெரிய நரம்பிழையில் உண்டாகும் உணர்வு குறைபாட்டினை கண்டறிய அதிர்வுணர்வு திறன் சொதனையானது பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சோதனையானது 128 Hz அதிர்வெண் உடைய "U" வடிவ அதிர்வு இசைகவடு கருவியின் (Tuning fork) மூலமோ அல்லது 10 கிராம் அழுத்தம் தரக்கூடிய மோனோஃபிலமெண்ட் எனும் உபகரணத்தின் மூலமோ பரிசோதிக்கபட்டு வருகிறது. நரம்பு செயல்பாட்டு பரிசோதனை முடிவுகள் சில சமயங்களில் குறைவான செயல்பாட்டினை காட்டகூடும் ஆனாலும் தீவிர நரம்பு குறைபாட்டுடன் தொடர்பு படுத்த படுகிறது.


ஆரம்ப காலத்தில் அதிர்வு இசைக்கவடு மூலம் செய்யபட்ட பாத அதிர்வுணர்வு சோதனைகளானது பின்னாளில் பயோதெசியோமீட்டர் (Biothesiometer) எனப்படும் மின்னணு கருவியின் மூலம் செய்யப்படுகிறது. முதலில் அனலாக் (Analog) உபகரணமாக இருந்த பயோதெசியோமீட்டர் பின்பு டிஜிட்டல் (Digital) உபகரணமாக மேம்படுத்தப்பட்டது, அதன் பின்பு அவை கணினியின் மென்பொருளுடன் (PC Software) இணைந்து செயல்படும் வடிவமைப்பாக மேம்படுத்தபட்டது. தற்போது இந்த உபகரணமானது ஆன்ட்ராய்டு திறன்பேசி (Android Smartphone) மென்பொருளுடன் இணைந்து செயல்படும் வடிவமைப்பை பெற்றுள்ளது.

நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சித்தரிக்கும் விளக்கப்படம்

மேற்கோள்கள் தொகு

  1. "Implication of oxidative stress in progression of diabetic retinopathy". Surv Ophthalmol 61 (2): 187–196. Jun 2015. doi:10.1016/j.survophthal.2015.06.001. பப்மெட்:26074354. 
  2. Forbes, JM; Coughlan MT; Cooper ME (June 2008). "Oxidative stress as a major culprit in kidney disease in diabetes". Diabetes 57 (6): 1446–1454. doi:10.2337/db08-0057. பப்மெட்:18511445 இம் மூலத்தில் இருந்து 2009-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090415073353/http://diabetes.diabetesjournals.org/cgi/content/full/57/6/1446. 
  3. "Treatment of painful diabetic neuropathy". Ther Adv Chronic Dis. 6 (1): 15–28. Jan 2015. doi:10.1177/2040622314552071. பப்மெட்:25553239. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரிழிவு_நரம்பியல்&oldid=3038169" இலிருந்து மீள்விக்கப்பட்டது