நீர் ஒருங்கிணைப்பி

1936 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தைச் (உருசியா) சேர்ந்த விலாடிமிர் லுக்கியனோவ் எனும் அறிஞர், கன்னாடி குழாய்களால் செய்யப்பட்டு நீரின் பாய்வு மற்றும் அழுத்தத்தை பயன்படுத்தி இந்தக்ராத்தர் யாத்ராவ்பியிசுகி (நீர் ஒருங்கிணைப்பி) எனும் கணினி ஒன்றை உருவாக்கியிருந்தார். பைஞ்சுதைகளில் ஏற்படும் விரிசல்களுக்கு காரணமாக இருக்கும் உள் வெப்பத்தை கணக்கிடப் பயன்படும் பகுதி-வகையீட்டுச்-சமன்பாடுகளுக்கு தீர்வுகாணும் கணினியாக இக்கணினி. இக்கணினியானது பாய்ம ஏரண மற்றும் பாய்ம விசையியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. பகுதி-வகையீட்டுச்-சமன்பாடுகளுக்கு தீர்வுகாணும் ஞாலத்தின் முதன்முதல் கணினி இதுவே. விலாடிமிர் லுக்கியனோவ், முதலில் இதனை ஒரு ஓரலகு கருவியாக வடிவமைத்து பின்னர் பன்னலகு கணக்கிடும் கருவியாக மெருகேற்றினார். உருசியாவின் கணக்கிடும் கருவிகள் நிறுவனம், இதனை உருவாக்கி அந்நாட்டில் 1970 வரை பயன்பாட்டில் இருந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hanly, Ken (1 December 2012). "In 1936 Soviet scientist Lukyanov built an analog water computer". Digital Journal. Archived from the original on 20 June 2018.
  2. Computing in Russia. The History of Computer Devices and Information Technology revealed, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-528-05757-2, from Georg Trogemann, Alexander Y. Nitussov, Wolfgang Ernst, Vieweg, Köln, Jul. 2001, p. 84 ff.
  3. Electronic Brains: Stories from the Dawn of the Computer Age, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-309-09630-8, from Mike Hally, Joseph Henry Press, Washington, D.C., 2005, Ch. 8, Water on the Brain, p. 185 ff.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_ஒருங்கிணைப்பி&oldid=4100133" இலிருந்து மீள்விக்கப்பட்டது