நீர் குச்சி பூச்சிகள்

நீர் குச்சி பூச்சிகள்
ரன்னேட்ரா சைனென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கெமிப்டெரா
துணைவரிசை:
கெட்ரோடெரா
குடும்பம்:
நெபிடே
பேரினம்:
ரன்னேட்ரா

பேப்ரிசியசு, 1790
ரன்னேட்ரா சைனென்சிசு

நீர் குச்சி பூச்சிகள் அல்லது தண்ணீர் தேள் என்பன ரன்னேட்ரா (Ranatra) பேரினத்தினைச் சார்ந்த நீர் வாழ் பூச்சிகளாகும். இவை நெபிடே குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணி பூச்சிகள் ஆகும். உலகெங்கிலும் உள்ள வெப்பமான மற்றும் மிதவெப்பமான பகுதிகளில் உள்ள நன்னீர் வாழ்விடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரன்னேட்ரா சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தென் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 சிற்றினங்களும் ஆசியாவில் (1972 இல் மதிப்பாய்வு செய்யப்பட்டது) சுமார் 30 சிற்றினங்களும் காணப்படுகின்றன. மீதமுள்ள சிற்றினங்கள் பிற இடங்களில் காணப்படுகின்றன. இந்த பழுப்பு நிற பூச்சிகள் முதன்மையாகக் குளங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற தேங்கி நிற்கும் அல்லது மெதுவாக நகரும் நீரில் காணப்படுகின்றன. ஆனால் ஓடைகளிலும் இவற்றைக் காணலாம். விதிவிலக்காக ஒருசில உப்பு நிறைந்த ஏரிகள் மற்றும் உவர் நீர்நிலைகளிலும் காணப்படுகின்றன.[1]

விளக்கம்

தொகு

நீர் குச்சி பூச்சிகளின் [2] முன்கால்கள் நன்கு வலுவானவை. இவை இரையைப் பற்றிக்கொள்ள உதவுகிறது. இவை பொதுவாக மற்ற பூச்சிகள், தலைப்பிரட்டை மற்றும் சிறிய மீன்களை உண்கின்றன. இவை இவற்றின் உறிஞ்குழல்களால் துளைத்து உமிழ்நீரை உட்செலுத்துகின்றன. நீர் குச்சி பூச்சிகள் உடலின் மேற்பரப்பில் உள்ள கொடுக்கு போன்ற உறுப்பின் உதவியால் தங்கள் இரையின் மீது மயக்கம் அளிக்கும் ஒரு திரவத்தை (உமிழ்நீரை) உட்செலுத்துகின்றன. உமிழ்நீரை உட்செலுத்தி பின்னர் மயக்கம் அடைந்த இரையை உட்கிரகிப்பதன் மூலம் உண்ணத் தொடங்குகின்றன. இவை, காத்திருந்து வேட்டையாடும் தன்மையுடையன. இவை நீர்த் தாவரங்களுக்கு இடையில் வசிக்கின்றன. தன்னைக் கடந்து செல்லும் இரையை ஆச்சரியப்படுத்தும் வகையில் தங்கள் கால்களை நீட்டிக் கொண்டு தலைகீழாக நிற்கின்றன.[3] இரவு நேரங்களில் மிதவை விலங்குகளைப் பிடிக்க நீரில் நீந்திச் செல்லும்.[4] நெபிடே குடும்பத்தில் உள்ள மற்ற உயிரிகளைப் போலவே, இவற்றின் உடலின் பின்பகுதியில் நீண்ட வால் போன்ற வடிகுழாய் அல்லது சுவாச மூச்சுக் குழல் உள்ளது.[4] இதன் வழியாகச் சுவாசிக்கின்றன.

முதிர்ச்சியடைந்த பூச்சியின் உடல் நீளம் பொதுவாக 2 முதல் 6 செ.மீ. வரை சிற்றினத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரு சிற்றினத்தில் ஆண் பூச்சியினைவிடப் பெண் பூச்சிகள் பெரியவை. வடிகுழல் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். ஆனால் உடல் நீளத்தின் பாதிக்குக் குறைவாக உள்ளது. கிழக்காசிய ர. சினென்சிசு மற்றும் தென்அமெரிக்க ர. மேக்னா ஆகிய இரண்டும் பெரிய அளவிலான சிற்றினங்கள் ஆகும்.[3][5] ரன்னேட்ராவிற்கு இறக்கைகள் உள்ளன. எனவே இவை பறக்கக் கூடியவை.[1]

கடுமையான குளிர் காலத்தினைத் தவிர பிற நேரங்களில், முதிர்ச்சியடைந்த பூச்சிகள் சுறுசுறுப்பாக காணப்படும். இவற்றின் முட்டைகள் நீர் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள தாவரங்களில் இடப்படும். ஆனால் சில இனங்களில் சேற்றில் இடப்படலாம்.[3] முட்டைகள் குஞ்சு பொரிக்க பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும். குஞ்சுகள் முதிர்ச்சியடைய இரண்டு மாதங்கள் ஆகும். முழுமையாக வளர்ந்து வரும் போது இவை 100 மிமி முதல் 125 மிமி வரை நீளமாக இருக்கும்.

சிற்றினங்கள்

தொகு

ரன்னேட்ரா பேரினத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ye.V. Anufriyeva; N.V. Shadrin (2016). "First Record of Ranatra linearis (Hemiptera, Nepidae) in Hypersaline Water Bodies of the Crimea". Hydrobiological Journal 52 (2): 56–61. 
  2. www.itis.gov/
  3. 3.0 3.1 3.2 P. Chen; N. Nieser; J.Z. Ho (2004). "Review of Chinese Ranatrinae (Hemiptera: Nepidae), with descriptions of four new species of Ranatra Fabricius". Tijdschrift voor Entomologie 147 (1): 81–102. doi:10.1163/22119434-900000142. 
  4. 4.0 4.1 Dean W. Blinn; Chris Pinney; Milton W. Sanderson (1982). "Nocturnal Planktonic Behavior of Ranatra montezuma Polhemus (Nepidae: Hemiptera) in Montezuma Well, Arizona". Journal of the Kansas Entomological Society 55 (3): 481-484. 
  5. Heckman, C.W. (2011). Encyclopedia of South American Aquatic Insects: Hemiptera - Heteroptera. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0704-7.
  6. Global Biodiversity Information Facility: Ranatra Fabricius, 1790 (retrieved 12 January 2021)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_குச்சி_பூச்சிகள்&oldid=3620778" இலிருந்து மீள்விக்கப்பட்டது