நீர்த் தாரை இயந்திரம்

(நீர் தாரை இயந்திரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீர்த் தாரை இயந்திரம் (Water jet cutter) என்பது அதிக அழுத்த நீரைக் கொண்டு பல்வேறு வகையான கடினமான

1.உயர் அழுத்த நீர் உள்ளீட்டு 2. வைரம் 3.சிராய்ப்பு பொருள் (கோமேதகம்) 4. கலக்கும் குழாய் 5.கவசம் 6.வெட்டும் நீர் தாரை 7.வெட்டப்படும் உலோகம்

பொருட்களை வெட்டவோ அல்லது துளையிடவோ பயன்படும் ஒரு தொழில்துறைக் கருவி ஆகும். கடினமான உலோகம் அல்லது கிரானைட் போன்ற பொருட்களை வெட்ட அல்லது துளையிட சிராய்ப்புப்பொருள் மற்றும் நீர் கலந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. தூய நீர் தாரை என்று குறிப்பிடும் பொழுது அதில் நீர் மட்டுமே பயன்படுத்தப்படும். இவை மென்மையான உலோகங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

நீர் தாரை இயந்திரங்கள் பெரும்பாலும், உலோக இயந்திரங்களின் பகுதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இது இயந்திரங்களின் மிக முக்கியமான பகுதிகளைத் துல்லியமாக வெட்டவோ அல்லது துளையிடவோ பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த முறையில் உலோகங்களில் ஏற்படும் வெப்பம் மிகவும் குறைவு. இந்த தொழில் முறை பூமி துளையிடல், சுரங்கங்கள் மற்றும் விண்வெளி ஊர்தி பாகங்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய பாகங்கள்

தொகு

உயர் அழுத்த நீர் உள்ளீட்டு

தொகு

உயர் அழுத்த நீர், வெளி ஆதாரத்தின் (External source) மூலம் பெறப்படுகிறது . இந்த உயர் அழுத்த நீரை உருவாக்க எக்கி (Pump) மற்றும் தூம்புவாய் (Nozzle) ஆகியவை பயன்படுகின்றன.

வைரம்

தொகு

வைரம் இந்த இயந்திரத்தின் உள்ளே வரும் நீரை வழிகாட்ட உதவுகிறது.

சிராய்ப்பு பொருள்

தொகு

கடினமான உலோகங்களை துளையிடும் பொது சிராய்ப்பு பொருள் (கோமேதகம்) மேலும் சிராய்ப்பை உருவாக்க உதவுகிறது.

கலக்கும் குழாய்

தொகு

இந்த கலக்கும் குழாய் சிராய்ப்பு பொருளையும் உயர் அழுத்த நீரையும் ஒன்றாய் கலக்க உதவும் பகுதி.

இயங்கும் முறை

தொகு

முதலில் உயர் அழுத்த நீர், உள்ளீட்டு பகுதியின் வழியே செலுத்தப்படுகிறது. இந்த உயர் அழுத்த நீர் வைரத்தின் மூலம் வழிகாட்டப்பட்டு, சிராய்ப்பு பொருளுடன் கலக்கும் குழாயில் கலக்கப்படும். பிறகு, இந்த கலவை வெட்டப்பட அல்லது துளையிடப்பட வேண்டிய இடத்தில் வேகமாகப் பாய்ச்சப்படும். இதன் மூலம் உலோகம் அரிக்கப்பட்டு துளையிடப்படுகிறது.

நன்மைகள்

தொகு
  • முக்கியமான நன்மை, ஒரு கட்டமைப்பின் குறுக்கீடு இல்லாமல் உள்ளார்ந்த பாகங்களை வெட்டும் திறன் இதன் முக்கியமான நன்மை.
  • இந்த முறையில் வெட்டும் போது உருவாகும் வெப்பம் குறைவு. எனவே, வெப்பத்தால் உலோகத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஏற்படக்கூடிய மாற்றம் குறைவு.
  • 3-D முறையில் உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்களைக் கூட இதன் மூலம் உருவாக்க முடியும்.
  • வெட்டும் அகலத்தை (kerf) தூம்புவாய் (Nozzle) மற்றும் சிராய்ப்பு பொருள்கள் (abrasive) மூலம் துல்லியமாக மாற்ற முடியும்.
- சிராய்ப்புப்பொருள் மற்றும் நீர் கலந்த கலவை பயன்படுத்தப்படுத்தும் பொது பொதுவாக 0.04″ - 0.05″ (1.016 - 1.27 மீ.மீ),ஆனால் 0.02″ (0.508 மீ.மீ) அகலமாக குறைத்து வெட்ட இயலும்.
- துய நீர் தாரை (நீர் மட்டும்) பயன்படுத்தப்படுத்தும் பொது பொதுவாக 0.007″ - 0.013″ (0.178 - 0.33 மீ.மீ), ஆனால் 0.003″ (0.076 மீ.மீ) அகலமாக குறைத்து வெட்ட இயலும் இது மனித தலைமுடியின் அளவு.
  • இதன் வெட்டும் அகலம் (kerf) குறைவு என்பதால் மற்ற முறைகளை விட நெருக்கமாக வெட்ட இயலும். இதனால் பிசிறு (scrap) குறைக்கப்பட்டு மூலப் போருள் வீணாவது தடுக்கப்படுகிறது.
  • நீர் தாரை இயந்திரங்கள் பொதுவாக அரை கலன் முதல் ஒரு கலன் நீரை, அதன் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளும். மேலும், இது மறுசுழற்சியும் செய்யப்படும். இதில் சிராய்ப்பு பொருளான கோமேதகமும் மறுசுழற்சி செய்யப்படுவதால் வெட்டும் கருவிகள் வாங்கும் செலவு குறைக்கப்படுகிறது.
  • இவை புகை மற்றும் தீப்பொறிகளை உருவாக்காததால் இயக்குவதற்கு சுலபமானதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

பல்துறை

தொகு

இந்த நீர் தாரை இயந்திரங்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு உலோகங்கள் வெட்டப்படுகின்றன.

 
நீர்_தாரை_இயந்திரங்கள்

பொதுவாக நீர் தாரை வெட்டி இயந்திரங்கள் ரப்பர், பிளாஸ்டிக், தோல், கூட்டமைவு, கல், ஓடு, உலோகங்கள், உணவு, காகிதம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வெட்டப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீர் தாரை இயந்திரங்களால் செம்பதக் கண்ணாடி, வைரம் மற்றும் சில பீங்கான் பொருட்களை வெட்ட இயலாது.

தரம்

தொகு
 
தரம்

நீர் தாரை இயந்திரங்களால் வெட்டப்பட்ட பொருட்களின் தரம் Q1 முதல் Q5 வரை வரையறுக்கப்படுகிறது. தாழ்ந்த எண்கள் சொரசொரப்பையும் உயர்ந்த எண்கள் மென்மையையும் குறிக்கின்றன. மெல்லிய உலோகங்களுக்கு வெட்டும் வேகம் Q1, Q5 விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். தடித்த உலோகங்களுக்கு வெட்டும் வேகம் Q1 - ஆனது , Q5 – ஐ விட 6 மடங்கு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 4” தடித்த அலுமினியம் Q5 தரத்தில் வெட்ட 0.72 இஞ்ச்/ நிமிடமும் (18 மீமீ/நிமிடம்) மற்றும் Q1 தரத்தில் வெட்ட 4.2 இஞ்ச்/ நிமிடமும் (107 மீமீ/நிமிடம்) எடுத்துக்கொள்ளும். இது 5.8 மடங்கு அதிக வேகம் ஆகும்.

பல அச்சு வெட்டு

தொகு

கட்டுப்பாடு மற்றும் இயக்கம் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டத் தற்கால முன்னேற்றங்களைக் கொண்டு, 5-அச்சு பாதையில் வெட்ட இயலும்.

 
5-அச்சு நீர் தாரை இயந்திரம்

சாதாரண நீர் தாரை X (மீண்டும்/முன்னும் பின்னும்), Y (வலது/இடது) மற்றும் Z (மேல்/கீழ்) அச்சுகள் முறையிலும், 5-அச்சு அமைப்பில் A அச்சு (செங்குத்தாக இருந்து கோணத்தில்) மற்றும் C (Z-அச்சை சுற்றி சுழற்சி) அச்சுகளிலும் இயங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்த்_தாரை_இயந்திரம்&oldid=1634210" இலிருந்து மீள்விக்கப்பட்டது