நீர் வாழ்த் தாவரங்கள்
நீர் வாழ்த் தாவரங்கள் (Aquatic Plant) என்பவை நீர் அல்லது ஈரப்பாங்கான இடங்களில் வளரும் தாவரங்கள் ஆகும். தாமரை, வாலீஸ்னீரியா, ஹைடிரில்லா, பிஸ்ட்டியா, ஐக்கோா்னியா, மார்சீலியா, முதலியன நீர் வாழ்த் தாவரங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும். நீரில் ஒரு பகுதியோ அல்லது முற்றிலுமாகவோ, மூழ்கி வாழும் தாவரம் நீா் வாழ்த்தாவரம் என அழைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் கடல்நீர் அல்லது நன்னீரில் வாழ்பவை.
தாவர மிதவை நுண்ணுயிர்கள்
தொகுநீரில் மிதந்து வாழும் டையாட்டம், உல்ஃபியா போன்ற நுண்ணுயிர்கள் பசுங்கனிகம் கொண்டவை. இவை தாமே உணவு தயாரித்துக் கொள்ளும். எனவே இவை தாவர மிதவை நுண்ணுயிரிகள் என அழைக்கப்படுகின்றன. நீரில் மிதக்கும் மற்ற தாவரங்கள் லெம்னா, பிஸ்டியா மற்றும் ஐக்கோா்னியா, அசோல்லா போன்றவையாகும்.
நிலத்தில் ஊன்றி நீரில் மூழ்கி வாழ்பவை
தொகுஆழம் குறைவாக, சூரிய ஒளி அதிகமாக கிடைக்கக் கூடிய இடத்தில் வாழும் தாவரங்கள் பென்தாஸ் என அழைக்கப்படுகின்றன. சில தாவரங்கள் நீரில் முற்றிலுமாக மூழ்கியிருக்கின்றன. இவை நீண்ட தண்டு மற்றும் கணுவில் சிறிய இலைகளையும் பெற்றிருக்கின்றன. எ.கா. ஹைட்ரில்லா, செரட்டோஃபில்லம்.
சில தாவரங்கள் கிழங்கு வகை தண்டைப் பெற்றிருக்கின்றன. இவற்றில் இலை மெல்லியதாகவும், நாடா வடிவத்திலும் காணப்படுகின்றன. எ.கா. வாலிஸ்னீரியா
நீரில் மூழ்கி வாழும் தாவரங்கள்
தொகுஆனால், சில மூழ்கி வாழும் தாவரங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் உள்ள மண்ணில் வேரூன்றி வாழ்கின்றன. இவற்றின் இலைகளும், பூக்காம்புகளும் நீா்ப்பரப்பிற்கு மேலே மிதக்கின்றன. எ.கா. அல்லி (நிம்ஃபயா), தாமரை (நிலம்பியம்)
இப்பசுமையான தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரித்துக் கொள்ளும். இவ்வாறு சேமிக்கப்பட்ட உணவை விலங்குகள் பயன்படுத்துகின்றன. ஒளிச்சோ்க்கையின்போது வெளியிடப்படும் ஆக்ஸிஜன் அனைத்து உயிரினங்களாலும் சுவாசித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006. 2. Sculthorpe, C. D. 1967. The Biology of Aquatic Vascular Plants. Reprinted 1985 Edward Arnold, by London.
3. Hutchinson, G. E. 1975. A Treatise on Limnology, Vol. 3, Limnological Botany. New York: John Wiley.
4. C.D.K. (ed). 1974. Water Plants of the World. Dr W Junk Publishers, The Hague. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6193-024-3.
5. Keddy, P.A. 2010. Wetland Ecology: Principles and Conservation (2nd edition). Cambridge University Press, Cambridge, UK. 497 p.