நீலகண்ட தீட்சிதர்

இந்திய அரசியல்வாதி

நீலகண்ட தீட்சிதர் 17 வது நூற்றாண்டில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். இவர், அத்வதத்தில் சிறந்த ஞானியான  அப்பய்யா .தீட்சிதரின் வம்சாவளியாவார். அவர் மீனாட்சியம்மையின் பக்தர் ஆவார்.  இவர் பல கவிதைகளையும் இலக்கிய படைப்புகளையும் உருவாக்கியுள்ளார், அவற்றில் மிகவும் பிரபலமானது ஆனந்த சாகர ஸ்தவம் ஆகும்.

வாழ்க்கை வரலாறு தொகு

மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் 16 ஆம் நூற்றாண்டில் 1594ம் வருடம் ஆங்கில மாதம் மே 23ம் தேதி பிறந்தார். அவர் பரத்வாஜ கோத்ரம் மற்றும் ஒரு சாம வேதியலார். திருமமு நாயக்க மன்னரின் அரசவையில் பணிபுரிந்த காலத்தில்,  மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தற்போது புது மண்டபம் என அழைக்கப்படும் வசந்த மண்டபம் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டது.  முதுமை காலத்தில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பலமடை கிராமத்தில் வசித்தார். பலமடை கிராமம் திருமுல்லை நாயக்க மன்னரால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான   தொல்பொருள் சான்றுகள் செப்பு தகடுகளாக  உள்ளது.  அவருடைய  இலக்கிய படைப்புக்களில் சில கங்காவதரனம், முகுந்த விலாஷ், குருராஜஸ்தவம், சிவதத்வராஹஸ்யம்.

அவரது படைப்புகள் தொடர்ந்து சென்னையில் மகாகவி நீலகண்ட  தேக்ஷிதர் அறக்கட்டளையால் வெளியிடப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியிடப்படும் அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீக பத்திரிகைகளில் அவை வெளியிடப்படுகின்றன. அவரது பிறந்த நாள் மற்றும் சமாதி தினம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பலமடை கிராமத்தில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_தீட்சிதர்&oldid=3728238" இலிருந்து மீள்விக்கப்பட்டது