நீலம் (மலர்)

நீலம் என்பது மலர். இது நீலநிறம் கொண்டது.

நீலம் என்னும் மலர்

இது இலங்கை நாட்டின் தேசிய-மலர். நீலமலர் எது என வரையறுப்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன[1]. இவற்றில் இளநீல-நிற மலர் வேறு, இருள்நீல-நிற மலர் வேறு என்னும் உண்மை தெளிவாகிறது.

சங்கப்பாடல்களில் நீலமலர்

தொகு
வெவ்வேறு மலர்கள்
  • நீலம், நெய்தல், குவளை, ஆம்பல், அல்லி ஆகியவை வெவ்வேறு மலர்கள். [2] [3] [4] [5]
பருவம்
ஊதைக்காற்று வீசும் காலத்தில் மிகுதியாக மலரும். [6]
இலைகள்
நீலமலர், சேம்பு ஆகியவற்றின் இலைகள் ஒன்றுபோல இருக்கும். [7] நீரில் பூக்கும் நீலமலர்களின் இலைப்பச்சையை நிலத்தில் வளரும் பயிர்ப்பச்சைக்கு உவமையாக எடுத்துக்கஃ காட்டுவர். [8] [9] [10]
மலரின் இதழ்கள்
நீளமாக இருக்கும். [11] நீல நிறத்தில் இருக்கும். [12] [13] வள்ளம்போல் சற்றே குழிவாக இருக்கும். [14] இதழ்கள் பலவாக இருக்கும். [15]
மலரின் நிறம்
வானத்துக் கருமேகம் போலப் பூக்கும் [16]
மயிலின் கழுத்து நீல மலர் போல இருக்கும் [17]
மலரும் நீர்நிலைகள்
சுனை, [18] உப்பங்கழி, [19] [20] பாட்டங்ககால் என்னும் வாய்க்கால் பகுதியில் நீலம், பாங்கர், முல்லை ஆகிய பூக்கள் மலர்ந்திருந்தன [21]
மகளிரின் கண் போல் இதழ்
வண்ணம், நீண்டிருக்கும் ஒருமுனைக்கூர் வட்டம், உட்குழிவு போன்ற நீலமலர் இதழின் தன்மைகளை எண்ணி மகளிரின் கண்களுக்கு நீல-இதழை உவமையாகக் காட்டுவர். [22] [23] [24] [25] (ஆண்களின் கணுகளுக்குத் தாமரை இதழ் உவமையாகக் கூறப்படும்.)
விற்பனை
நீலமலர் தலையில் சூடும் பூ. எனவே மகளிர் இதனை விற்பனை செந்தலும் உண்டு. [26]
  • காதலனுக்கு விளையாட்டு காட்டும் ஒருத்தி நீல மலரோடும் பாங்கர் மலரோடும் ஒளிந்துகொண்டாள். [27]

இவற்றையும் காண்க

தொகு

படங்கள்

தொகு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. இலங்கையின் தேசிய மலர் நீல அல்லி. அதற்கெனப் பயன் படுத்தப்படும் மலரின் படம் நில்மானெல்: இந்தப் படம் தொடர்பாக எழுந்துள்ள புதிய சர்ச்சை![தொடர்பிழந்த இணைப்பு]
  2. அரக்கிதழ் குவளையொடு நீலம் நீடி - பெரும்பாணாற்றுப்படை 293
  3. ஒளிறு இலஞ்சி அடை நிவந்த, முள் தாள சுடர்த்தாமரை, கள் கமழும் நறுநெய்தல், வள்ளிதழ் அவிழ் நீலம், மெல்லிலை அரி ஆம்பலொடு, வண்டு உறை கொண்ட கமழ்பூம் பொய்கை - மதுரைக்காஞ்சி 251
  4. அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவொடு அமைந்த கண்ணியும் தாரும் - கலித்தொகை 91
  5. பல் இதழ் நீலமொடு நெய்தல் நிவக்கும் தண் துறை – ஐங்குறுநூறு 2
  6. பரிபாடல் 11
  7. நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பு – 178-4
  8. நீலத்து அன்ன பாசிலை - நற்றிணை 249
  9. நீலத்து அன்ன பைம்பயிர் – மதுரைக்காஞ்சி 279
  10. நீலத்து அன்ன விதைப்புனம் - மலைபடுகடாம் 102
  11. நீடு இதழ் தலைய கவின் பெறு நீலம் கண் என மலர்ந்த சுனை - அகம் 38
  12. நீலமலர் கலி 64-20,
  13. நீலிதழ் 33-28
  14. வள்ளிதழ் நீலம் - குறுந்தொகை 366-5
  15. பல் இதழ் நீலம் - அகம் 302-5
  16. அகம் 314
  17. அகம் 358
  18. சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் - கலித்தொகை 7-11
  19. நீல இருங்கழி நீலம் கூம்பும் - ஐங்குறுநூறு 116
  20. இருங்கழி மலர்ந்த வள் இதழ் நீலம் - அகம் 270-1
  21. கலித்தொகை 111
  22. நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரிமலர் மழைக்கண் - அகம் 149
  23. கண்போல் நீலம் சுனைதொறும் மலர - நற்றிணை 161, 273,
  24. உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி 257-8, 273,
  25. கலி புரி அவிழ் நறுநீலம் புரை உண்கண் 15-20
  26. வீங்குநீர் அவிழ் நீலம் பகர்பவர் - கலித்தொகை 66
  27. கலித்தொகை 115
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_(மலர்)&oldid=3218765" இலிருந்து மீள்விக்கப்பட்டது