நீல சாம்பல் சுண்டெலி
நீல-சாம்பல் சுண்டெலி என்பது ஆத்திரேலிய கொறி விலங்கான சூடோமிஸ் கிளகசு ஆகும். இது கிழக்கு ஆத்திரேலியாவில் காணப்பட்ட அழிந்துபோன விலங்காகக் கருதப்படுகிறது.
Blue-grey mouse | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Pseudomys |
இனம்: | †P. glaucus
|
இருசொற் பெயரீடு | |
Pseudomys glaucus Thomas, 1910 |
வகைபாட்டியல்
தொகுஇந்த சிற்றினத்தை ஓல்ட்பீல்ட் தாமஸ் 1910இல் விவரித்தார்.[2] சூடோமிஸ் கிளகசு என அடையாளம் காணப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை மூன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்திலும் மற்றொன்று நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிரையனில் தெற்கே சேகரிக்கப்பட்டது.
விளக்கம்
தொகுசூடோமிஸ் ஓர் வகை, ஆத்திரேலிய கொறித்துண்ணியான வீட்டு எலியான மசு மசுகுலசினை ஒத்திருக்கின்றன. சூடோமிஸ் கிள கசு நேர்த்தியான உடல் மற்றும் அடர்த்தியான ரோமங்களுடனும், உடலின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்துடனும், மேற்பகுதி வெளிறிய நீல சாம்பல் நிறத்துடனும் கூடியது. அறியப்பட்ட மூன்று மாதிரிகளின் மொத்த நீளம் (தலையிலிருந்து உடல் வரை வரை) 95 மில்லிமீட்டர் ஆகும். வால் சற்று நீளமானது (100 மிமீ). வெள்ளை முடிகளுடன் கூடியது. இந்த சுண்டெலியின் எடையானது 25 முதல் 30 கிராம் வரையாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lamoreux, J. (2008). "Pseudomys glaucus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/18564/0. பார்த்த நாள்: 6 January 2009.
- ↑ Thomas, O. (1910). "New Australian Muridae of the genus Pseudomys". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology (Taylor and Francis, Ltd.) 8 (6): 607–610 [608]. https://biodiversitylibrary.org/page/15629383.
- ↑ Menkhorst, P.W.; Knight, F. (2011). A field guide to the mammals of Australia (3rd ed.). Melbourne: Oxford University Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195573954.