நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி

எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் (Consumer) கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் (Model) கொள்ளலாம். இதையே நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி எனக் கூறுகின்றோம்.

  1. பிரைச்சனைகளை அடையாளம் காணல்
  2. பிரைச்சனைகளிற்கான தீர்வுகளை ஆராய்தல்
  3. தீர்வுகளில் சிறந்ததற்கு முன்னுரிமை
  4. கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு
  5. கொள்வனவு செய்தல்

இந்தப் படிமுறைகளிற்கூடாக செல்வதற்கு தேவையான நேரம் பொருள் அல்லது சேவையின் (Goods or services) பெறுமதியின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக இரண்டு ரூபாய்க்கு ஒரு சாக்லட் வாங்குவதற்கு ஒரு நுகர்வோன் எடுக்கும் நேரம் சில வினாடிகளே. ஆனால் அதேவேளை 2 கோடி பெறுமதியான ஒரு வீட்டை வாங்குவதானால் அந்த நுகர்வோன் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட மேற்கூறிய பொறிமுறையினூடு செல்வதற்கு செலவழிக்கலாம்.

பொதுவாக நுகர்வோனின் கொள்வனவு அவனிற்கு இருக்கும் பிரைச்சனைகளைத் தீர்க்கும் முகமாகவே இருக்கும். பிரைச்சனைகளிற்கான தீர்வுகளையே மக்கள் வாங்குகின்றார்களே தவிர பொருட்களை வாங்குவதில்லை. ஆகவே சந்தைப்படுத்தலில் (Marketing) மக்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களிற்கு பொருத்தமான தீர்வைத் தருவதன் மூலமே சந்தைப் படுத்தலை அதிகரிக்கலாம்.