நுகேகொடை மேம்பாலம்

நுகேகொடை மேம்பாலம் நுகேகொடை நகரின் அரச மரச்சந்தியில் அமைந்துள்ளது. நுகேகொடை நகரில் ஏற்பட்ட கணிசமான வாகன நெரிசலைச் சமாளிக்க இலங்கை அரசு இந்த மேம்பாலத்தை அமைத்தது. 7 அக்டோபர், 2008 இல் ஆரம்பித்த கட்டுமாணப் பணிகள் 23 சனவரி, 2009 இல் நிறைவுற்றது[1].

நுகேகொடை மேம்பாலம்
வகைசாலைவழி
இடம்நுகேகொடை , இலங்கை
அமைத்தவர்இலங்கை வீதி அதிகாரசபை
திறக்கப்பட்ட நாள்சனவரி 23 2008
நீளம்261 மீட்டர்
வழிகள்2

261 மிற்றர் நீளமானதாகவும் 8.5 மீற்றர் அகலமானதாகவும் இரண்டு வழிப்பாதைகளுடன் இந்தப் பாலம் அமைந்துள்ளது. 878 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் பிரித்தானிய அரசின் கடனுதவியினால் அமைக்கப்பட்டது[2].

இந்தப் பாலம் மூலம் வாகன நெருக்கடி குறைக்கப்பட்டாலும் சிலர் இந்தப் பாலம் மூலம் பாதசாரிகள் பிரைச்சனைகளை எதிர்நோக்குவதாகக் கூறியுள்ளனர் [3].

உசாத்துணைகள்

தொகு
  1. "இலங்கை வீதி அதிகாரசபை". Archived from the original on 2010-04-16. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  2. "Nugegoda flyover opened". Archived from the original on 2009-10-24. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  3. Nugegoda Flyover and The problems that it could create[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகேகொடை_மேம்பாலம்&oldid=3560943" இலிருந்து மீள்விக்கப்பட்டது