நுங்கு வண்டி

நுங்கு வண்டி என்பது தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழும் விளையாட்டுகளில் ஒன்று. இது வெளிப்புற விளையாட்டுகளில் ஒன்று.சங்க காலம் தொட்டே விளையாடிவரும் சிறுவர் விளையாட்டு என தமிழர்களால் சொல்லப்படுகிறது. எனினும் தற்போது விளையாட்டு மெல்ல அழிந்து வருகிறது.

தோற்றம் தொகு

இந்த சிறுவர் விளையாட்டு எப்போது தோன்றியது என்பதற்கான சான்றுகள் இல்லை.தமிழகத்தின் கோடைகாலத்தில் கிராமப்பகுதிகளில் அதிகமாக வளரும் பனைமரத்தில் காய்க்கும் நுங்கைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

நுங்கு வண்டி அமைப்பு தொகு

பனைமரத்திலிருந்து வெட்டிய நுங்கை உறிஞ்சி உண்ட பின், வீண் எனத் தூக்கி எறியப்படும் நுங்கின் மேற்பகுதிகளைக் கொண்டு நுங்கு வண்டி தயாரிக்கப்படுகிறது. இரண்டு சக்கரங்களுடன், ஆங்கில எழுத்தான V போன்று இருக்கும் நீளமான கவை மூலம் தள்ளுவதால் இந்த சக்கரங்கள் சுழற்றப்பட்டு, நுங்கு வண்டி நகரும்.

நுங்கு வண்டி தயாரிக்க தேவையானவை தொகு

  • சம எடை/வடிவமுள்ள தூக்கியெறியப்படும் நுங்கின் இரண்டு மேற்பகுதிகள்
  • ஒரு சாண் நீளமுள்ள சிறு குச்சி
  • V வடிவிலான இரண்டு முதல் மூன்று அடி நீளமுள்ள குச்சி(கவை)

நுங்கு வண்டி செய்யும் விதம் தொகு

பனைநுங்கின் மேற்பகுதியிலுள்ள மூன்று கண்கள் போன்ற பகுதிகளுக்கு இடையில் ஒரு சாண் நீளமுள்ள குச்சியை நுழைத்து,மறுபுறம் எடுத்து,மற்றொரு பனைநுங்கின் அடிப்பகுதியிலிருந்து முன்புறமாக சொருகினால் இரண்டு நுங்கின் பகுதிகளும் இணைக்கப்பட்டு, சுழலும் சக்கரம் கிடைக்கும். இதனை வி வடிவிலான 2 முதல் 3 அடி நீளமுள்ள குச்சியைக் கொண்டு தள்ளுவதன் மூலமாக நுங்கு சக்கரங்கள் சுழன்று, இடம் விட்டு இடம் நகரும்.

நுங்கு வண்டியின் வகைகள் தொகு

நுங்குவண்டியில் பொருத்தி விளையாடப்படும் நுங்கு சக்கரங்களின் எண்ணிக்கையை பொறுத்து இதனை வகைப்படுத்தலாம். குறைந்தது இரண்டு முதல் தயாரிப்பாளரின் திறனைப்பொறுத்து நுங்கு சக்கரங்களை கூட்டிக்கொண்டே போகலாம். இதனால் வண்டியின் அமைப்பும் மாறும்.

சிறப்புகள் தொகு

  • சிறுவர் சிறுமியருக்கு மனமகிழ்ச்சி கிட்டும்
  • அவர்களே நுங்கு வண்டியை தயாரிப்பதால் அவர்களின் படைப்பாற்றல் திறனும், சிந்தனை திறனும் வளர வாய்ப்புள்ளது.
  • மேலும் அவர்கள் இயந்திர தளவாட பொறியியல் துறையில் படிக்கும்போது நவீன புதிய கருவிகள் கண்டுபிடிப்பு/தயாரிப்புகளுக்கு இந்த விளையாட்டு தூண்டுகோல் அமையும்.
  • வீணாகும் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் அறிவுத்திறன் வளரும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுங்கு_வண்டி&oldid=2317218" இலிருந்து மீள்விக்கப்பட்டது