நுணா
தாவர இனம்
(நுணா (மரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுணாமரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. tinctoria
|
இருசொற் பெயரீடு | |
Morinda tinctoria Roxb. |
நுணா (Morinda tinctoria) அல்லது மஞ்சணத்தி அல்லது மஞ்சள்நாறி (இலங்கை வழக்கு: மஞ்சள்வண்ணா)[1] எனப்படும் ஒருவகை மூலிகை சிறுமரமாகும். இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும்[2][3][4].[5]
படக்காட்சி
தொகு-
இலைகள்
-
பழங்கள்
-
மரப்பட்டை
சிறப்புகள்
தொகு- நுணா மரத்தை இக்காலத்திலும் தணக்க மரம் என வழங்குகின்றனர்.
- நுணாப்பூ வெண்ணிறத்தில் மல்லிகை அளவில் ஆனால், தடித்த இதழ்களுடன் பூக்கும்.
- சங்கப்பாடல்
- சங்க கால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தணக்கம் பூவும் ஒன்று.[6]
- பயன்
- கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை உண்பர். துவர்க்கும்.
- நுணா மரம் இலேசானது. என்றாலும் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது. நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும்.
- படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.
- குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்