நுண் முட்கள்

நுண் முட்கள் (Spinule) என்பது சிறிய முட்கள் [1] (முதுகெலும்பு நெடுவரிசைகள்) ஆகும். இவை உயிரியல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் ஒரு பகுதியாகும். இந்த வார்த்தை லத்தீன் வார்த்தையான இசுபைனுலாவிலிருந்து (spinula) உருவானது. இச்சொல் பெரும்பாலும் தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

நுண் முட்கள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி உயிரிகளின் வடிவம், இனங்களை வேறுபடுத்தி அறியலாம். உடற்கூறியல் அம்சங்களை விவரிக்கவும் வேறுபடுத்தவும் செய்யலாம்.[2] கண்ணில் உள்ள நுண்முட்கள் வளர்ச்சி டோபமைன், சர்க்கேடியன் இசைவு, மற்றும் ஒளி அல்லது இருள் சூழல்களுக்கு உட்படுத்தப்படுவதைப் பொறுத்துக் கட்டுப்படுத்தப்படுகிறது.[3][4]

திரவப் படிகக் காட்சிப் பலகைகள் திசை மாறுபாட்டுப் பண்பு கொண்ட கடத்தும் படலத்தைப் பயன்படுத்தலாம். இது "நெகிழிப்பசை பிசின் மற்றும் நிக்கல் துகள்களுடன் கூடிய நுண் முட்களைக் கொண்டுள்ளது".[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Dictionary.com
  2. Entomological Society of Canada (1863-1871), Entomological Society of Canada (1951- ), Entomological Society of Ontario The Canadian entomologist. p. 51. Item notes: v. 19-20 - 1887
  3. Helga Kolb, Harris Ripps, John E. Dowling, Samuel Miao-sin Wu Concepts and challenges in retinal biology: a tribute to John E. Dowling page 531 2001
  4. John Simon Werner, Leo M. Chalupa The visual neurosciences Item notes: v. 2 - 2003 - 1930 pages MIT Press
  5. Interconnection Structure for Liquid Crystal Display IBM Technical Disclosure Bulletin IP.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்_முட்கள்&oldid=3934756" இலிருந்து மீள்விக்கப்பட்டது