நுரையீரல் காற்று நுண்ணறைகள்

நுரையீரல் காற்று நுண்ணறைகள் என்பவை நுரையீரலில் காணப்படும் நுண்ணறைகள் ஆகும். மனித சுவாசப்பாதை மூக்கில் தொடங்கி நுரையீரல் சிற்றறையில் முடிவடைகிறது. சுவாசப்பையில் ஏறக்குறைய 300 மில்லியன் நுரையீரல் சிற்றறைகள் உள்ளன. நுரையீரல் சிற்றறைகள் நுரையீரல் தந்துகிகள் சூழ்ந்துள்ளன. நுரையீரல் தந்துகிகளுடன் தொடர்புடைய சிற்றறைச் சுவர்களின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 70 ச.மீ . ஆகும்.

நுரையிரல் காற்று நுண்ணறைகள்

நுரையீரல் சிற்றறை சுவர்கள் தொகு

இரண்டு வகையான புரசதப் படலகச் செல்களால் ஆனவை.

1. செல்கள் தட்டையாகவும் அதிக அளவு திசுப்பாய்மம் பெற்றவை.

2. செல்கள் சிறிது தட்டையாக இருக்கும். இச்செல்கள் நுரையீரல் சிற்றறை விரிவடையும் திறன் சீராக இருக்க உதவும்.

சுவாசித்த காற்று நுரையீரல் சிற்றறையில் தந்துகி சுவர் வழியாக ஊடுருவிக் குருதியில் ஆக்சினேற்றம் அடைகிறது . இந்த ஊடுருவல் திறன் செல் சவ்வின் இருபுறமும் உள்ள காற்றின் பகுதியழுத்த வேறுபாட்டை பொறுத்துள்ளது. நுரையீரல் சிற்றறையில் உள்ள காற்றிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து குருதி ஓட்டத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும். இதற்கு மாறாக கார்பன்டை ஆக்சைடு நுரையீரல் சிற்றறையில் உள்ள காற்றுக்குள் சென்று கொண்டிருக்கும்.

கார்பன்டை ஆக்சைடு பகுதியழுத்தம் சிரையில் மிகுதியாகவும், நுரையீரல் சிற்றறையில் குறைவாகவும் இருக்கும்.இந்த பகுதியழுத்த வேறுபாடே, ஆக்சிஜன் -கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கு காரணம். இந்த பரிமாற்றம் மூலம் நுரையீரல் சிற்றறையில் ஆக்சிஜன் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடின் அளவு மிகுந்திருக்கும். வெளிசுவாசத்தின் போது இந்த காற்று வெளியேற்றப்பட்டு, உட்சுவாசத்தின் போது புதிய காற்று தொடர்ந்து நுரையீரல் சிரைக்கு வரும்.

மேற்கோள்கள் தொகு

[1]

[2]

[3]

  1. Cyril A. Kelle, wright's applied Physiology, Thirteenth edition, OXford University Press, Oxfdord 1982
  2. Daniels, Christopher B. & Orgeig, Sandra (2003). "Pulmonary Surfactant: The Key to the Evolution of Air Breathing". News in Physiological Sciences. 18
  3. Roberts, M., Reiss, M., Monger, G. (2000) "Gaseous exchange." Advanced Biology. Surrey, Nelson. p. 167.