நூரா அல்-பதி
நூரா 'அப்துல்லாஹ் அல்-பதி (Nura 'Abd Allah al-Badi) ஓர் ஓமான் நாட்டின் கவிஞர் ஆவார். இவர் 1969 ஆம் ஆண்டு பிறந்தார்.
நூரா அல்-பதி | |
---|---|
பிறப்பு | நூரா அப்துல்லாஹ் அல்-பதி 1969 ஓமான் |
தேசியம் | ஓமான் |
கல்வி நிலையம் | அஜ்மான் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி பால்கன் ஹஸ் எ ஃப்ரி விங், கலிமத் அல்-ஹக் |
தனிபட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇவர் அல் புரைமி என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் அஜ்மான் பல்கலைக்கழகத்தின் மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்லூரியில் கல்விப் பயின்றார். மேலும் கல்வித்துறையில் தொழில் ரீதியாகவும் பணியாற்றினார்.
படைப்புகள்
தொகுஇவரது லி-எல்-ஷாஹின் ஜினா ஹர் (தி பால்கன் ஹஸ் எ ஃப்ரி விங்) என்ற கவிதை தொகுப்பு எகிப்தின் கெய்ரோவில் வெளியிடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகும் அல் கலீஜ் என்ற செய்திதாளுக்கு வாரந்திர கட்டுரை பகுதியிலும் எழுதியுள்ளார். இவரது வானொலித் தொடரான கலிமத் அல்-ஹக் (உண்மையான வார்த்தை ) அபுதாபி வானொலிக்காக உருவாக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் கருப்பொருள்கள் குறித்து சாவத் அல்-ஆர்ட் (பூமியின் குரல்) என்ற ஓப்பரெட்டாவின் உரையையும் எழுதியுள்ளார். இவரது கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. [1]
குறிப்புகள்
தொகு- ↑ "Casa Árabe - Contemporary Omani Poetry". en.casaarabe.es. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.