நூர் மகால், பகவல்பூர்

நூர் மகால் (Noor Mahal ) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவல்பூரில் உள்ள பாக்கித்தான் இராணுவத்திற்கு சொந்தமான அரண்மனை ஆகும். 1872 ஆம் ஆண்டில் இது நவீனத்துவமாக இத்தாலிய நியோகிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்டது. பிரிட்டிசு இராச்சியத்தின் போது பகவல்பூர் சுதேச அரசின் நவாப்களுக்கு சொந்தமாக இருந்தது. [1]

நூர் மகால்
நூர் மகால்,பகவல்பூர்
நூர் மகால், பகவல்பூர் is located in பாக்கித்தான்
நூர் மகால், பகவல்பூர்
நூர் மகால், பகவல்பூர் (பாக்கித்தான்)
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிநவீனத்துவமாக இத்தாலிய நியோகிளாசிக்கல் பாணி
நகரம்பகவல்பூர்
நாடுபாக்கித்தான்பாக்கித்தான்
ஆள்கூற்று29°22′45″N 71°40′04″E / 29.3792°N 71.6679°E / 29.3792; 71.6679
கட்டுமான ஆரம்பம்1872
நிறைவுற்றது1875
தொழில்நுட்ப விபரங்கள்
அளவு44,600 சதுர அடிகள் (4,140 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)திரு. ஹீனன்

வரலாறு

தொகு
 
நூர் மகாலின் முகப்புத் தோற்றம்

இதன் கட்டுமானம் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன. ஒரு புராணத்தின் படி, நவாப் நான்காம் அட்னான் அப்பாசி தனது மனைவிக்காக இந்த அரண்மனையை எழுப்பியதாகவும், அவள் சாரளத்தின் வழியே பார்க்கும்போது அருகிலுள்ள கல்லறையைப் பார்க்க நேர்ந்ததாகவும் என்வே அவள் இதில் ஒரு இரவு மட்டுமே தங்கியதாகவும் அதனால் அவன் ஆட்சியின் போது அரண்மனை பயன்படுத்தப்படாமல் இருந்தது. [2]

விளம்பரம் இல்லாததால் நூர் மகால் பகவல்பூரின் மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாகும். அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இது தற்போது பாக்கித்தான் இராணுவத்தின் வசம் உள்ளது. இது மாநில தர்பார் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்துவதற்கு ஒரு மாநில விருந்தினர் மாளிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கட்டிடக்கலை

தொகு
 
நூர் மகாலின் உட்புறம்

மாநில பொறியியலாளராக இருந்த திரு. ஹீனன் என்ற ஆங்கிலேயர் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். நூர் அரண்மனைக்கு அடித்தளம் 1872 இல் போடப்பட்டது. ஒரு நல்ல சகுனமாக அதன் வரைபடமும் நாணயங்களும் அதன் அஸ்திவாரத்தில் புதைக்கப்பட்டன. அரண்மனையின் பெரும்பாலான பொருட்கள் மற்றும் தளவாடங்கள் இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அரண்மனையின் கட்டுமானம் 1875 ஆம் ஆண்டில் ரூ. 1.2 மில்லியன் ஆகும். 1862 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் நாணயத்தில் 11.66 கிராம் என்ற வெள்ளியின் அளவைக் கருத்தில் கொண்டால், 2016 ஆம் ஆண்டில் இந்த தொகை சுமார் 8.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வரும். நூர் அரண்மனை 44,600 சதுர அடிகள் (4,140 m2) கொண்டது. இது அடித்தளத்தில் 14, 6 வராண்டாக்கள் மற்றும் 5 குவிமாடங்கள் உட்பட 32 அறைகளைக் கொண்டுள்ளது. [3]

இந்த வடிவமைப்பு கொரிந்திய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் அம்சங்களை உள்ளடக்கியது. துணைக் கான்டினென்டல் பாணியுடன். கொரிந்திய தொடுதல் நெடுவரிசைகள், கந்தணி, பெடிமென்ட்ஸ் மற்றும் தர்பார் அறையின் மேல் பகுதி ஆகியவற்றில் தெரியும். இஸ்லாமிய பாணி ஐந்து குவிமாடங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஐந்தாவது நவாப் முகம்மது பகவல்கான் 1906 ஆம் ஆண்டில் அரண்மனைக்குள் ஒரு மசூதியை ரூ. 20,000 செலவில் எழுப்பினான். இதன் வடிவமைப்பு லாகூரின் அட்சீசன் கல்லூரியின் மசூதியை அடிப்படையாகக் கொண்டது .

1956 ஆம் ஆண்டில், பகவல்பூர் மாநிலம் பாக்கித்தானில் இணைக்கப்பட்டபோது, அந்தக் கட்டிடம் மத விவகாரங்கள் துறையால் கையகப்படுத்தப்பட்டது. இந்த அரண்மனை 1971 இல் இராணுவத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் இராணுவம் இதை 119 மில்லியன் தொகைக்கு வாங்கியது.

இந்த கட்டிடம் செப்டம்பர் 2001 இல் பாக்கித்தானின் தொல்பொருள் துறையால் "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக" அறிவிக்கப்பட்டது. இது இப்போது பொது பார்வையாளர்கள், மாணவர்கள் பயணங்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேண்டிய விஷயங்கள்

தொகு

அரண்மனையில் நிறைய பழைய விஷயங்கள் உள்ளன. இதில் பல நவாப்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. பல பழைய வாள்கள், பழைய நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள், அந்த காலத்தில் செய்யப்பட்ட பழைய சட்டங்கள், நவாப்கள் விளையாடப் பயன்படுத்திய பழைய பியானோ, நவாப்கள் பயன்படுத்திய பழைய தளவாடங்கள் போன்றவை உள்ளன. இதில் ஒரு நீண்ட சுவர் உள்ளது. அதில் நவாப்களின் கற்பனை படங்கள் உள்ளன. ஒரே ஒரு படம் மட்டுமே உண்மையானது. மற்ற அனைத்தும் கற்பனையானவை. மகாலை அடுத்து ஒரு சிறைச்சாலையும் உள்ளது.

புகைப்படங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The Bahawalpur.com - Noor Mahal". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  2. History of Noor Mahal Bahawalpur - daaira.com
  3. Noor Mahal - History

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_மகால்,_பகவல்பூர்&oldid=3507213" இலிருந்து மீள்விக்கப்பட்டது