நூற்றிப் பத்து (நெல்)

நூற்றிப் பத்து (Nootripathu) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்படும் இந்நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 1800 கிலோ வரையிலும் தானிய மகசூலும், ஒரு பார எடை (1 டன்) வைக்கோலும் கிடைப்பதாக கருதப்படுகிறது.[1]

நூற்றிப் பத்து
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
மகசூல்
ஏக்கருக்கு 1500 - 1800 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம்

தொகு

வறட்சியைத் தாங்கி மிக உயரமாக வளரக்கூடிய இந்நெல் இரகம், பொதுவாக ஆகத்து மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

வளருகை

தொகு

நூற்றிப் பத்து அரிசியின் வெளிப்புறத் தோல் வெள்ளை நிறமாகவும், உட்பகுதியில் சிவப்பு நிறமாகவும் காணப்படும் இது, வைகை ஆற்றுப் பெருநிலப் பகுதிகளின் களிமண் வயல்களில் நன்கு வரக்கூடியதாக கூறப்படுகிறது[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Nootripathu". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
  2. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்றிப்_பத்து_(நெல்)&oldid=3722427" இலிருந்து மீள்விக்கப்பட்டது