நூற்றொகை அறிவியல் பகுப்பாய்வு

நூற்றொகை அறிவியல் பகுப்பாய்வு[1] என்பது நூல்கள், கட்டுரைகள் மற்றும் பிற வெளியீடுகளை, குறிப்பாக அறிவியல் உள்ளடக்கங்களைப் பகுப்பாய்வு செய்யப் புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்துவது. இப்பகுப்பாய்வு முறை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளியான நூற்றொகைப் பகுப்பாய்வு முறை பின்னர் 1960களில் பிரைசு-கார்பீல்டு ஆகியோரின் ஆய்வுச் செயல்பாடுகளினால் முறைப்படுத்தப்பட்டது[2].

இது ஆய்வின் தாக்கம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, புலமைசால் இதழ்களுக்கும் நூல்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்தவொரு மேற்கோள்கள் மற்றும் உள்ளடக்க பகுப்பாய்வின் அளவறி ஆய்வாகும். ஒரு குறிப்பிட்ட ஆய்வின் வெளியீடு, மற்ற வளங்களால் எத்தனை முறை மேற்கோள் காட்டப்படுகிறது என்பதை அளவிடுவதன் மூலம் அந்த ஆய்வின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட படைப்பு மற்ற கல்வி இலக்கியங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை அளவிடலாம். நூற்றொகைப் பகுப்பாய்வு எப்போதும் தரமான சக ஆய்வர்களின் மதிப்பாய்வினாலும் ஆய்வாளரின் வாதத்தினாலும் வலுவூட்டப்பட வேண்டும்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. அலகு 5. தமிழ்ப் பல்கலைக்கழகம் [1]
  2. இசுபிரிங்கர் [2]
  3. மேரிலாந்து பல்கலைக்கழகம் [3]

கலைச்சொற்கள்

தொகு
  • ஆய்வின் தாக்கம் - research impact * புலமைசால் இதழ் - scholarly journal
  • அளவறி ஆய்வு - quantitative research * உள்ளடக்கப் பகுப்பாய்வு - content analysis
  • ஆய்வு வெளியீடு - research publication * சக மதிப்பாய்வு - peer review