நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) என்பது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகின்றது.

நோக்கம்

தொகு

சுதந்திரமான, அனைத்துலக, அரசசார்பற்ற, இலாபநோக்கு இல்லாததுமான இந்த அமைப்பு பின்வருவனவற்றை அடைவதை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது.

  1. நூலக மற்றும் தகவல் சேவைகளை ஏற்படுத்துவதிலும், வழங்குவதிலும் உயர் தரத்தை அடைவதை ஊக்குவித்தல்,
  2. நல்ல நூலக மற்றும் தகவல் சேவைகளின் பெறுமதி தொடர்பான பரவலான விளக்கத்தை ஊக்குவித்தல்,
  3. உலகம் முழுவதிலும் உள்ள அதன் உறுப்பினர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.

வெளியிணைப்புகள்

தொகு