நூலக பகுப்பாக்கம்
நூலக பகுப்பாக்கம் எனப்படுவது நூலக சாதனங்களை அவற்றின் விடய அடிப்படையில் குறியிட்டு ஒழுங்குபடுத்தும் செய்முறையாகும். இங்கு நூலக சாதனங்களாக நூல்கள், கட்புல செவிப்புல சாதனங்கள், கணினிக் கோப்புக்கள், வரைபடங்கள், கையெழுத்துப் பிரதிகள், போன்றனவற்றை குறிப்பிடலாம்.
நூல்களை பகுப்பாக்கம் செய்தல் அவற்றை எளிதான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் குறித்த விடய நூல்களை எளிதாக தேர்ந்தெடுப்பதற்கும் உதவும்
பகுப்பாக்கத்தின் போது ஒரே விடயப்பரப்பினை கொண்ட நூல்கள் ஒரே விதமாக குறியீடு இடப்பட்டு ஒன்றாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன..