நூலாக்க உத்திகள்
உந்தி எழும் நுண்ணறிவை உத்தி என்கிறோம். தொல்காப்பியத்தின் இறுதி நூற்பா உத்திகள் 32 என வரையறுக்கிறது.[1][2][3] இந்த 32 உத்திகளை நன்னூல் வேறு வகைச் சொற்களால் தொகுந்நுக் காட்டுகிறது.[4]
- நுதலியது அறிதல்,
- அதிகார முறையே,
- தொகுத்துக் கூறல்,
- வகுத்து மெய்ந் நிறுத்தல்,
- மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்,
- மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்,
- வாராததனான் வந்தது முடித்தல்,
- வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்,
- முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே,
- ஒப்பக் கூறல்,
- ஒருதலை மொழிதல்,
- தன் கோள் கூறல்,
- முறை பிறழாமை,
- பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்,
- இறந்தது காத்தல்,
- எதிரது போற்றல்,
- மொழிவாம் என்றல்,
- கூறிற்று என்றல்,
- தான் குறியிடுதல்,
- ஒருதலை அன்மை,
- முடிந்தது காட்டல்,
- ஆணை கூறல்,
- பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்,
- தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்,
- மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்,
- பிறன் கோள் கூறல்,
- அறியாது உடம்படல்,
- பொருள் இடையிடுதல்,
- எதிர் பொருள் உணர்த்தல்,
- சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்,
- தந்து புணர்ந்து உரைத்தல்,
- ஞாபகம் கூறல், உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு, மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிற அவண் வரினும், சொல்லிய வகையான் சுருங்க நாடி, மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு, இனத்தின் சேர்த்தி உணர்த்தல்
அடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் 3-656 இறுதி நூற்பா
- ↑ மொழியின் இயல்பைப் கூறும் தொல்காப்பியத்தில் இத்தகைய கற்பனைகளுக்கு இடமில்லை. எனவே இந்த நூற்பா தொல்காப்பிய இடைச்சுருகல்களில் ஒன்று என்பது தெளிவு
- ↑
ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்-
நுதலியது அறிதல், அதிகார முறையே,
தொகுத்துக் கூறல், வகுத்து மெய்ந் நிறுத்தல்,
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்,
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்,
வாராததனான் வந்தது முடித்தல்,
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்,
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே,
ஒப்பக் கூறல், ஒருதலை மொழிதல்,
தன் கோள் கூறல், முறை பிறழாமை,
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்,
இறந்தது காத்தல், எதிரது போற்றல்,
மொழிவாம் என்றல், கூறிற்று என்றல்,
தான் குறியிடுதல், ஒருதலை அன்மை,
முடிந்தது காட்டல், ஆணை கூறல்,
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்,
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்,
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்,
பிறன் கோள் கூறல், அறியாது உடம்படல்,
பொருள் இடையிடுதல், எதிர் பொருள் உணர்த்தல்,
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்,
தந்து புணர்ந்து உரைத்தல், ஞாபகம் கூறல்,
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு, மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்,
சொல்லிய வகையான் சுருங்க நாடி,
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்-
நுனித்தகு புலவர் கூறிய நூலே. - ↑
நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோள் கூறல்
சொல்பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இதுஎன மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகஎடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்துணர வைப்புஎன உத்திஎண் நான்கே (நன்னூல் 14) - ↑ தொல்காப்பியம் காட்டுவன