நெக்டாரியன்
நிலவின் காலஅளவுகோலின் படி 3920 முதல் 3850 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் நெக்டாரியன் காலம் (Nectarian Period) ஆகும். இந்த காலகட்டத்தில் தான் பெரிய மோதல்களின் விளைவாக நெக்டேரிஸ் பள்ளங்கள் மற்றும் பெரும்பான்மையான பள்ளங்கள் நிலவில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மோதலின் விளைவாக வெளியேறிய பொருளினால் நிலவின் உயர்ந்த பகுதிகளில் டெந்ஸ்லீ க்ரேடர்ட் நிலப்பரப்பு உருவாகிருக்கலாம் என கருதப்படுகிறது.