நெக்ரசோவைட்டு

சல்போவுப்புக் கனிமம்

நெக்ரசோவைட்டு (Nekrasovite) என்பது Cu26V2(Sn,As,Sb)6S32. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய தாமிர வனேடியம் சல்போவுப்புக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. கனிமத் தொகுதிகளில் சிறு மணிகளாக சம அளவுத்திட்டத்தில் நெக்ரசோவைட்டு படிகமாகிறது. பழுப்பு நிறத்தில் ஒளிபுகா உலோக கனிமமாக காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் நெக்ரசோவைட்டின் கடினத்தன்மை மதிப்பு 4.5 என்றும் மற்றும் இதன் ஒப்படர்த்தி 4.62 என்றும் அளவிடப்பட்டுள்ளது.

நெக்ரசோவைட்டு
Nekrasovite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCu26V2(Sn,As,Sb)6S32
இனங்காணல்
நிறம்பழுப்பு
மோவின் அளவுகோல் வலிமை4.5
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.62

முதன்முதலில் கிழக்கு உசுபெக்கித்தானின் காய்ராகாட்சு தாதுப் படிவில் 1984 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.[1] 1929 ஆம் ஆண்டு பிறந்த உருசிய கனிமவியலாளர் இவான் யாகோலெவிச்சு நெக்ரசோவ் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்ரசோவைட்டு&oldid=4091976" இலிருந்து மீள்விக்கப்பட்டது