நெடுங்கை வேண்மான்

நெடுங்கை வேண்மான் நெடுங்கை என்ற ஊரை [1] ஆண்டவன். சோழநாட்டு பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என இவன் போற்றப்படுதலால் நெடுங்கை என்னும் ஊர் பிடவூர் என்று அழைக்கப்பட்டது என்றறியலாம். அன்றியும் நெடுங்கை என்பதை வழங்கும் நீண்ட கை எனவும் கொள்ளலாம். [2] [3]

அடிக்குறிப்பு

தொகு
  1. இக்கால நெடுங்கூர் இந்த ஊரா என ஆராயப்பட வேண்டும்
  2. சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
    செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
    நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
    அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! - புறம் 395
  3. சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது. புறம் 395 கொளுக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்கை_வேண்மான்&oldid=2566235" இலிருந்து மீள்விக்கப்பட்டது