நெடுந்தூரப் புகைப்படக் கலை

நெடுந்தூரப் புகைப்படக் கலை (Long distance photography) ஏன்பது ஒரு வகையான எண்ணிம புகைப்படம் எடுத்தல் கலையாகும். வளிமண்டலத்தின் மூலம் நெடுந் தூரத்தில் காணக்கூடிய பொருளை புகைப்படம் எடுத்தல் இக்கலையில் உள்ளடங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட ஒரு பொருள் வானப் பின்னணியில் தெளிவான வானத்தின் கீழ் எவ்வளவு தொலைவில் காணமுடியும் என்ற நெடுந்தொலைவை இப்புகைப்படம் தீர்மானிக்கிறது.[1]. கோட்பாட்டளவில் சுமார் 330 கிமீ தூரம் என்ற அதிகபட்ச வரம்பு ராலே சிதறல் நிலைகளால் வரையறுக்கப்படுகிறது.[2]. நடைமுறையில் இந்த அதிகபட்ச வரம்பு பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. [3]:

  • பார்வைக் கோடு வடிவியல்
  • ஒளிவிலகல்
  • வளிமண்டலத்தில் ஒளிச் சிதறலும் ஒளி ஈர்ப்பும்
  • மனித கண்ணின் உணர்திறன்

வகைகள்

தொகு
நீண்ட தூர அவதானிப்பு
தரையுடன் உறுதியாக தொடர்பு கொண்டுள்ள அல்லது நிலத்தின் மேலுள்ள இரண்டு பொருட்களுக்கு இடையேயான தொலைவுக் காட்சியைக் கைப்பற்றுவது நெடுந்தொலைவு அவதானிப்பு என அழைக்கப்படுகிறது.
வான்வழி அவதானிப்பு
புகைப்படக் கருவியின் இடத்தைப் பொருட்படுத்தாமல் வளிமண்டலத்தில் மிகவும் தீவிரமான தூரத்திலிருந்து பொருட்களை கைப்பற்றுவது வான்வழி அவதானிப்பு என அழைக்கப்படுகிறது.

படமெடுக்கப்பட்ட அதிகபட்ச தொலைவு

தொகு
 
துலூசு நகரத்திலிருந்து 445 - 454 கிமீ தொலைவில் தாபைன் ஆல்ப்சு

2017 ஆம் ஆண்டு சூரிய உதயத்திற்கு முன் பிரான்சு நாட்டிலுள்ள துலூசு நகரத்தில் கைப்பற்றப்பட்ட பிளாங்கு மலை - இதுவரை கைப்பற்றப்பட்ட புகைப்படங்களில் மிக அதிக தூரம் - 538 கிமீ[4]

பிளாங்கு மலை செருமனியில் உள்ள கொலோனுக்கு மேலே தரை மட்டத்திலிருந்து 4000மீ உயரத்தில் பார்த்தது. 1948 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட அவதானிப்பு - சுமார் 530 கிமீ[5]

2016 ஆம் ஆண்டு துலூசு நகரத்தில் கைப்பற்றப்பட்ட 4102 மீட்டர் உயரம் கொண்ட பாரே டி எக்ரின்சு மலை புகைப்படம்[6]

மேற்கோள்கள்

தொகு
  1. https://par.nsf.gov/servlets/purl/10167366 | Vollmer M., 2020, Below the horizon - the physics of extreme visual ranges (in:) Applied Optics, vol. 59, No. 21
  2. . C. F. Bohren and E. E. Clothiaux, Fundamentals of Atmospheric Radiation (Wiley, 2006
  3. https://par.nsf.gov/servlets/purl/10167366 | Vollmer M., 2020, Below the horizon - the physics of extreme visual ranges (in:) Applied Optics, vol. 59, No. 21
  4. https://beyondrange.wordpress.com/2018/07/11/in-flight-pictures-mont-blanc/
  5. https://par.nsf.gov/servlets/purl/10167366 | Vollmer M., 2020, Below the horizon - the physics of extreme visual ranges (in:) Applied Optics, vol. 59, No. 21
  6. https://www.mkrgeo-blog.com/long-lens-photography-from-the-plane-how-it-works/