நெடுவேள் ஆதன்
(நெடுவேளாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெடுவேளாதன் என்பவன் வளமிக்க போந்தை என்னும் ஊரை ஆண்ட வேள் குல மன்னன் ஆவான். போந்தை என்று பல ஊர்கள் அழைக்கப்பட்டாலும் இவனாண்ட போந்தை சோழநாட்டு மிழலைக்கூற்ற போந்தை என்று புறநானூற்று பாடல் மூலம் அறியலாம்.புறம் 338
நெடுவேள் ஆதன் சங்ககால அரசர்களில் ஒருவன்.
போந்தை அவனது தலைநகர்.
இவன் மூவேந்தர்க்கும் அஞ்சாதவன்.
தன் மகளைத் தன்னைப் பணிபவர்க்கே மணம் முடித்துத் தருவதாக அறிவித்திருந்தான்.[1]
அடிக்குறிப்பு
தொகு- ↑
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் (புறம் 338)