நெதர்லாந்து தமிழர்
தமிழ்ப் பின்புலம் உடைய நெதர்லாந்து வாழ் மக்கள் நெதர்லாந்து தமிழர் எனப்படுகிறார்கள். இவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள். சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[1] இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.
1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து.