நெய்தல் மலர்
நெய்தல் மலர் | |
---|---|
நீலாம்பல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | N. nouchali
|
இருசொற் பெயரீடு | |
Nymphaea nouchali Burm. f. | |
வேறு பெயர்கள் | |
|
நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.
ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.
- நன்னீர் மலர்
- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
நீர்நிலை மலர்
- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.[1]
- இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.
வயல்வெளி மலர்
- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.[2]
- இது வயலில் பூக்கும்.
- உவர்நீர் மலர்
- கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
சங்கப்பாடல்கள் தரும் செய்தி
தொகு- நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்.[3][4]
- நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்.[5]
- உப்பங்கழியில் பூக்கும்.[6]
- நெல்வயலில் பூக்கும்.[7][8][9]
- அலங்கும் இதழ்களைக் கொண்டது.[10]
- புல்லிய இதழ்களைக் கொண்டது [11]
- நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்.[12]
- கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர்.[13]
- தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.[14]
- நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.[15]
- எருமை நெய்தலின் புதுப்பூக்களை மேயும்.[18]
- சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது.[19]
நெய்தல் மலர்கள் படம்
தொகு-
நெய்தல் மலர்
-
நீலாம்பல்
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 79.
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 84.
- ↑ ஐங்குறுநூறு 181,
- ↑ நற்றிணை 113,
- ↑ ஐங்குறுநூறு 182
- ↑ ஐங்குறுநூறு 183
- ↑ ஐங்குறுநூறு 190,
- ↑ நெய்தலஞ்செறு – அகம் 113
- ↑ நெய்லங்கழனி – புறம் 209
- ↑ ஐங்குறுநூறு 185
- ↑ நற்றிணை 239
- ↑ திணைமொழி ஐம்பது 41
- ↑ ஐங்குறுநூறு 135
- ↑ குறுந்தொகை 401
- ↑ ஐங்குறுநூறு 187
- ↑ ஐங்குறுநூறு 188
- ↑ ஐங்குறுநூறு 189
- ↑ அகம் 100
- ↑ புறம் 10