நெருப்பை விரும்பும் செடி
பாங்க்சியா கிராண்டிஸ் (Banksia grandis), என்பது பொதுவாக புல் பாங்க்சியா[2] அல்லது ஜியண்ட் பாங்க்சியா,[3] என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பொதுவான மற்றும் தனித்த மேற்று மற்றும் தென்மேற்கு ஆத்திரேலியாவில் காணப்படும் ஒரு வகைத் தாரவமாகும்.. நூங்கார் மக்கள் இத்தாவரத்தை பீரா, பியாரா, பூங்குரா, குவாஞ்சியா, பிரா என்ற பெயர்களால் அழைக்கின்றனர்.[4] இத்தாவரம் நெருப்பை எதிர்க்கும் தன்மை கொண்ட முக்கியத்தண்டு மற்றும் தடிமனான பட்டையையும் கொண்டுள்ளது. இதன் இலைகள் முக்கோண வடிவ பக்க மடல்களைக் கொண்டவை. இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிற பெரிய நீள் வட்டக்கூம்பு வடிவமானவை.
புல் பாங்க்சியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | பாங்க்சியா செர். கிராண்டிஸ் |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/பாங்க்சியா செர். கிராண்டிஸ்ப. கிராண்டிஸ்
|
இருசொற் பெயரீடு | |
ப கிராண்டிஸ் கார்ல் லுட்விக் வில்டெனோவ்[1] | |
வேறு பெயர்கள் [1] | |
சிர்மியூல்லெரா கிராண்டிஸ் (காட்டுவகை.) ஓட்டோ குன்ட்சே |
செடியின் அமைவு
தொகுஇம்மரம் 10 முதல் 30 அடி உயரம் வளரக்கூடியது. இதில் நெருக்கமாக பல கிளைகள் உண்டு. இதனுடைய இலைகள் மிகவும் விசித்திரமானது. ஒரு அடி நீளம் மட்டுமே உள்ளது. இதனுடைய விளிம்பு பற்கள் போன்று உள்ளது. இலை பச்சை முதல் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். பூ மிகவும் அழகாக இருக்கும். பூவைச் சுற்றி பூவடிச் செதில் அதிகமாக இருக்கும். பூக்கள் தூகை போல் உள்ளது. [2][5][6][7] இதன் தாயகம் ஆத்திரேலியா ஆகும். சர் ஜோசப் பாங்க்ஸ் என்கிற ஆங்கில விஞ்ஞானியின் பெயர் இம்மரத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 46 வகைகள் உள்ளது. நெருப்பு என்றால் தாவரங்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் இச்செடியின் விதைகள் வெடித்து சிதறுவதற்கு நெருப்பு மிகவும் அவசியம். வெடித்து சிதறினால் மட்டுமே விதைகள் முளைக்கும். நெருப்பு ஏற்படவில்லை என்றால் இச்செடிகள் செடிகள் முளைப்பது கிடையாது. சிறு புதர்கள் தீப்பிடித்து எரியும் போது ஏற்படும் வெப்பத்தால் கனியின் ஓடு வெடித்து விதையை வெளியே கொட்டுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Banksia grandis". Australian Plant Census. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ 2.0 2.1 "Banksia grandis". FloraBase. Department of Environment and Conservation, Government of Western Australia.
- ↑ Boland, Douglas J.; Brooker, M. Ian H.; Chippendale, George M.; Hall, Norman; Hyland, Bernard P.M.; Johnston, Robert D.; Kleinig, David A.; McDonald, Maurice W.; Turner, John D. (2006). Forest trees of Australia (5th ed.). Collingwood, Victoria: CSIRO Publishing. p. 636. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0643069690.
- ↑ "Noongar names for plants". kippleonline.net. Archived from the original on 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 24 November 2016.
- ↑ George, Alex S. (1999). Flora of Australia (PDF). Vol. 17B. Canberra: Australian Biological Resources Study, Canberra. pp. 195–196. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ George, Alex S. (1996). The Banksia Book (3rd ed.). Kenthurst, New South Wales: Kangaroo Press. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86417-818-2.
- ↑ George, Alex S. (1981). "The Genus Banksia L.f. (Proteaceae)". Nuytsia 3 (3): 308–311. https://www.biodiversitylibrary.org/item/223763#page/141/mode/1up. பார்த்த நாள்: 1 May 2020.