நெறிஞ்சிப்பட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நெறிஞ்சிப்பட்டி என்பது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோவிலங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கிராமமானது கமுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் சாயல்குடியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 600 குடியிருப்புகளுக்கும் மேல் உள்ளது. விவசாயமானது முக்கிய வாழ்வாதாரம் ஆக உள்ளது. விவசாயத்தில் நெல், பருத்தி, மிளகாய், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, மேலும் பல பயிர்கள் பயிர்ப்படுகின்றன. இந்த விவசாய உற்பத்தியின் மூலமாக நேரடியாக அருகில் அமைந்துள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி, மிளகாய், மக்காச்சோளம். கேழ்வரகு, குதிரைவாலி பெரும்பாலும் சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள விருதுநகர் அங்காடிக்கே கொண்டு செல்லப்படுகிறது. மிகவும் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.