நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)

நெல்லிக்காய் விளையாட்டை விழாக் காலங்களில் போடப்பட்டிருக்கும் பந்தலில் சிறுவர் சிறுமியர் விளையாடுவர்.

ஆடும் முறை தொகு

விளையாடுவோரின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்த எண்ணிக்கையில் பற்றவேண்டிய பந்தற்கால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும். பந்தற்காலைப் பிடித்துக்கொண்டால் தொடக்கூடாது என்பது விளையாட்டு விதி. நெல்லிக்காய் என வழங்கப்படும் இந்த விளையாட்டு பாடித் தொடும் விளையாட்டு வகையைச் சேர்ந்தது.

இக்காலத்தில் பரவலாக விளையாடப்படும் இசைநாற்காலி விளையாட்டைப் போன்றது இது. இசைநாற்காலி விளையாட்டில் இசைத்தட்டு பாடும். பாடல் நிறுத்தப்பட்டதும் நடுவிலுள்ள நாற்காலிகளில் உட்காருவர். பள்ளிகளில் ஆசிரியரின் ஊதல் ஒலி கேட்டதும் நடுவில் உள்ள நாற்காலிகளில் மாணவர் அமர்வர்.

நெல்லிக்காய் விளையாட்டில் ஓடிக்கொண்டிருக்கும்போது பட்டவர் அல்லது அவ்வப்போது தோற்றவர் பாடுவார்.

காயோ கடப்பங்காய்
காஞ்சிபுரத்துப் புளியங்காய்
உப்போ புளியங்காய்
ஊறுகாய் போட்ட -------- நெல்லிக்காய்.

நெல்லிக்காய் என்றதும் தூணைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

கருவிநூல் தொகு

  • மு.வை.அரவந்தன், தமிழக நாட்டுப்பாடல்கள், பாரிநிலையம் வெளியீடு, 1977