நெல்லிரசம்
நெல்லிரசம் என்பது நெல்லிக்காயோடு, சீனி, நிறமூட்டி ஆகியவை சேர்த்து செய்யப்படும் ஒரு குடிபானம் ஆகும். நெல்லிரச உற்பத்திக்கு யாழ்ப்பாணம் புகழ்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உற்பத்திசெய்யப்படும் நெல்லிரசத் தயாரிப்புகள் இலங்கையில் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.