நெல் துங்ரோ

துங்ரோ நோய் என்பது இளம் பயிர்களைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும். நெல் துங்ரோ பெஸ்லிஃபாம் வைரஸ் மற்றும் நெல் துங்ரோ ஸ்பெரிகல் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் இந்நோய் எல்லாப் பருவங்களிலும் (நாற்றங்கால் முதல் அறுவடை வரை) நெற்பயிர்களைத் தாக்கும். துங்ரோ என்பது பிலிப்பினோ பேச்சுவழக்கில் 'வளர்ச்சி சீரழிவு' என்று பொருள்படும்.[1]மேலும் இந்த வைரஸ் முதன்முதலில் பிலிப்பைன்ஸில் 1975 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

தீநுண்மம்
தீநுண்ம வகைப்படுத்தல்
(தரவரிசைப்படுத்தப்படவில்லை): தீநுண்மம்
தொகுதி: ரைபோவிரியா
வகுப்பு: ரெவ்ட்ராவிரிசெட்டுகள்
வரிசை: ஆர்டெர்வைரல்ஸ்
குடும்பம்: காலிமோவிரிடே
பேரினம்: துங்ரோவைரஸ்
இனம்:
தீநுண்மம்:
துங்ரோ தீநுண்மம்

அறிகுறிகள் தொகு

தாக்கப்பட்ட இலைகள் முதலில் மஞ்சளாகவும் பின்பு ஆரஞ்சு கலந்த மஞ்சள் அல்லது துரு போன்ற பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாகக் காணப்படும். செடிகளின் வளர்ச்சி குன்றி நுனி இலைகள் வெளிப்பக்கமாக சுருண்டு காணப்படும். குருத்து இலைகளில் தேமல் போன்ற வெளிறிய திட்டுகள் தென்படும். மேலும் இது நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் தாக்கக் கூடியதாகும். [2]

பரவும் விதம் தொகு

பச்சைத் தத்துப் பூச்சிகள் (நெஃபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ்) நெற்பயிரின் இலைகளின் சாறினை உறிஞ்சும் போது அவற்றின் குழலுக்குள் உள்ள நச்சுயிரி செடியினுள் செலுத்தப்பட்டு இந்நோய் ஏற்படும். [3] நெற்பயிர் துங்ரோ உருளை வடிவ நச்சுயிரானது 100-300 மிமீ நீளமும், 30-35 மிமீ அகலமும் கொண்டது. இந்த நச்சுயிரியானது இரு உட்கரு அமிலமாக 8.3 கிலோ பைட்ஸ் (8.3 kb) அளவு கொண்டது. நெற்பயிர் துங்ரோ கோள வடிவ நச்சுயிரி சீரான வடிவமுடையது. அதன் குறுக்களவு 30 நானோ மீட்டர் ஆகும். இந்த நச்சுயிரி பலகற்றை ஒரு புரியிழையுடைய உட்கரு அமிலமாக 12 கிலோ பைட்ஸ் அளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Genus: Tungrovirus - Caulimoviridae - Reverse Transcribing DNA and RNA Viruses - International Committee on Taxonomy of Viruses (ICTV)". Archived from the original on 7 December 2020.
  2. "பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்".
  3. நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மை - முனைவர். மு. தேவநாதன் - நெல் ஆராய்ச்சி நிலையம் - திரூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்_துங்ரோ&oldid=3918396" இலிருந்து மீள்விக்கப்பட்டது