நெல் வயல்

நெல் விளைவதற்கேற்ற வளம் கொண்ட வயல்

நெல் வயல் என்பது நீர் அதிகம் தேவைப்படுகின்ற பயிர் வளரக்கூடிய நிலப்பகுதியாகும்.குறைந்தபட்சம் 50 செ.மீ (20 அங்குலம்) நீருடன் (ஈரப்பதத்துடன்) வளரக்கூடியது. தற்போதுள்ள சீனாவின் யாங்சீ ஆற்றின் தென் பகுதியில் 8,200-13,500 ஆண்டுகளுக்கு முன்னரே காட்டு நெல் வளர்ப்பிலிருந்து அனைத்து வகை குறிப்பாக இண்டிகா மற்றும் ஜபோனிக்கா நெல் சாகுபடியின் விளைவு என மரபு சார்ந்த சான்றுகள் காணப்படுகிறன.[1] இருப்பினும் இண்டிகா வகை ஜபோனிக்கா வகையிலிருந்து வந்தது என்றாலும் சாகுபடி முறைகளில் மாற்றங்களைக் கொண்டுள்ளது. நெல் வயல்கள் கிழக்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகள் நெல் பயிர் செய்ய ஏற்றதாக உள்ளன. பள்ளதாக்குகள், சதுப்பு நிலங்கள் மற்றும் செங்குத்தான, சாய்வான மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யலாம்.[2] ஆனால் அப்பகுதிகளில் நீர், உழைப்பு, பொருட்களின் தேவை, நீர்ப்பாசன முறைகள் போன்றவை அதிகளவில் தேவைப்படும். இப்பகுதிகளில் வாழும் மக்கள் நெல் வயல்களில் காளைகள் மற்றும் எருமைகள் போன்ற விலங்குகளை பயன்படுத்துகின்றனர்.

தாவண்கரேயில் நெல் வயல்
மேற்கு வங்காளத்தில் நெல் வயல்

20 ஆம் நூற்றாண்டின் போது விவசாய நிலங்களில் நெற்பயிரே ஆதிக்கம் கொண்டிருந்தது. தாய்லாந்து மலை வாழ் பழங்குடி மக்கள் தற்போதும் மேட்டு நில அரிசி என்று அழைக்கப்படும் வறண்ட மண் வகையை பயிரிடுகின்றனர். நெற் பயிர் ஆசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.[3] குறிப்பாக பங்களாதேஷ், சீனா, தைவான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, மலேசியா, மியான்மர், நேபாளம்,பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் பகுதிகள், ஐரோப்பா கண்டத்தில் வடக்கு இத்தாலி, பிரான்ஸில் காமர்கியூ[4], ஸ்பெய்னில் குறிப்பாக வாலனண்சியா நிலப் பகுதியில் உள்ள அல்புஃபெரா டி வாலனண்சியா கேடலோனியாவி எப்ரே ஆற்றின் டெல்டா பகுதி, அண்டலூசியாவில் உள்ள GUADALQUIVIR ஈர நிலப் பகுதி மற்றும் பிரேசிலின் கிழக்கு கடற்கரையோரம், ஹைட்டி ப்குதியில் அட்ரிபோனைட் பள்ளத்தாக்கு, கலிப்போர்னியா பகுதியில் ஸ்கரமென்டோ பள்ளத்தாக்கு மற்றும் சில பகுதிகளில்நெல் பயிராகின்றது.

நெல் என்ற வார்த்தை மலாய் சொல் PADDY,அரிசி ஆலை என்பதிலிருந்து பெறப்பட்டது.[5]

மேற்கோள்

தொகு
  1. Molina, J.; Sikora, M.; Garud, N.; Flowers, J. M.; Rubinstein, S.; Reynolds, A.; Huang, P.; Jackson, S.; Schaal, B. A.; Bustamante, C. D.; Boyko, A. R.; Purugganan, M. D. (2011). "Molecular evidence for a single evolutionary origin of domesticated rice". Proceedings of the National Academy of Sciences. 108 (20): 8351. PMC 3101000 Freely accessible. PubMed. doi:10.1073/pnas.1104686108.
  2. Gross, B. L.; Zhao, Z. (2014). "Archaeological and genetic insights into the origins of domesticated rice". Proceedings of the National Academy of Sciences. 111 (17): 6190. PMC 4035933 Freely accessible. PubMed. doi:10.1073/pnas.1308942110.
  3. Huke, R.E.; Huke (17 March 2013). "A Brief History of Rice". From the publication Rice: Then and Now, International Rice Research Institute, 1990. Guide to Thailand. Archived from the original on 17 March 2013. Retrieved 17 March 2013. "In Southeast Asia, by contrast, rice was originally produced under dryland conditions in the uplands, and only recently did it come to occupy the vast river deltas." |first2= missing |last2= in Authors list (help)
  4. "Riz de Camargue, Silo de Tourtoulen, Riz blanc de Camargue, Riz et céréales de Camargue". Riz-camargue.com. Retrieved 25 April 2013
  5. "paddy". Merriam Webster. Retrieved 15 July 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்_வயல்&oldid=3287518" இலிருந்து மீள்விக்கப்பட்டது