நெழிலோவைட்டு

கனிமம்

நெழிலோவைட்டு (Nezhilovite) என்பது PbZn2(Mn4+Ti4+)2Fe8O19 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிளம்பைட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் பெர்மனெக்கு மற்றும் பலர் நெழிலோவைட்டைக் கண்டுபிடித்தனர்.[1] P63/mmc என்ற இடக்குழுவில் a = 5.849 Å, c = 22.809 Å Z=2 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் அறுகோணப் படிகத் திட்டத்தில் கருப்பு நிறப் படிகங்களாக நெழிலோவைட்டு கனிமம் படிகமாகிறது.[2] ஒளியியல் ரீதியாக திசை மாறுபாட்டுப் பண்பு கொண்டதாகவும், பாரா காந்தப் பண்பும், இருபிரதிபலிப்பும் கொண்ட பண்புகளைக் கொண்டுள்ளது. மாசிடோனாவின் பெலகோனியப் பகுதியில் காணப்படும் ஒருவகை உருமாறிய பாறைகளில் இக்கனிமம் காணப்படுகிறது.[2]

நெழிலோவைட்டு
Nezhilovite
நெழிலோவைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுPbZn2(Mn4+,Ti4+)2Fe8O19
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணம்
மிளிர்வுஉலோகத் தன்மை
கீற்றுவண்ணம்அடர் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.69
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Nežilovite". mindat.org.
  2. 2.0 2.1 "NEZILOVITE, A NEW MEMBER OF THE MAGNETOPLUMBITE GROUP AND THE CRYSTAL CHEMISTRY OF MAGNETOPLUMBITE AND HIBONITE". The Canadian Mineralogist 34: 1287–1297. 1996. https://rruff-2.geo.arizona.edu/uploads/CM34_1287.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெழிலோவைட்டு&oldid=4145552" இலிருந்து மீள்விக்கப்பட்டது