நேசமணி நகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நேசமணி நகர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஊராகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி என்பவரது பெயரால் இவ்வூர் 1950 முதல் நேசமணி நகர் என அழைக்கப்படுகிறது. இது நாகர்கோவிலிலிருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கத்தோலிக்க பிஷப் இல்லமும் சைமன் நகரும் இதன் கிழக்குப்பகுதியிலும் லுத்தரன் தெருவும் நெசவாளர் வாழிடமும் இதன் வடக்குப்பகுதியிலும் அனந்தன் நகரும் பெருமாள் நகரும் இதன் மேற்குப்பகுதியிலும் மேற்கு கோணம் சாலையும் கோணம் குளமும் இதன் தெற்குப்பகுதியிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இவ்வூர் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்லது. இது நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்டது.
வாழிடப் பகுதி ஆசாரிபள்ளம் முதனமை சாலை சுற்றிவருகிறது. இச்சாலை மருத்துவக் கல்லூரி சாலை எனவும் அழைக்கப்படுகிறது. இச்சாலைகன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் சென்று இணைகிறது. இது 432 எண்ணுள்ள மாவட்ட முதன்மை சாலையாகும். முதலில் இது ஒருவழிச் சாலையாக இருந்து, பின் 2005 இல் நாகர்கோயில் நகராட்சியால் தரமுயர்த்தப்பட்டது.
நேசமணிநகர் நாகர்கோயில் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே இது நாகர்கோயில்நகராட்சி மேயர் ஆட்சிக்கு உட்பட்டதாகும்.