நேச நாயனார்

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

நேச நாயனார்
பெயர்:நேச நாயனார்
குலம்:சாலியர்
பூசை நாள்:பங்குனி ரோகிணி
அவதாரத் தலம்:காம்பீலி
முக்தித் தலம்:ஆரூர் [1]
“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.

நுண்பொருள்தொகு

  1. சிவனடியார்களுக்கு உடை உதவுதல் சிறந்த சிவத்தொண்டு

நேசநாயனார் குருபூசை நாள்: பங்குனி உரோகிணி.

ஆதாரங்கள்தொகு

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்

உசாத்துணைகள்தொகு

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேச_நாயனார்&oldid=2113660" இருந்து மீள்விக்கப்பட்டது