நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (2 பிப்ரவரி 1763 – 16 பிப்ரவரி 1831) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பணியாற்றிய ஆங்கிலேய குடிமுறை அரசுப்பணி அதிகாரியாவார். இவர் 1794-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.[2]

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி
ஜான் ஸ்மார்டு வரைந்த கிண்டர்ஸ்லியின் ஓவியம், 1787
பிறப்பு(1763-02-02)2 பெப்ரவரி 1763 [1]
கிரேட் யார்மவுத், நார்ஃபோக், இங்கிலாந்து
இறப்பு16 பெப்ரவரி 1831(1831-02-16) (அகவை 68)
லிட்டில் மார்லோ, பக்கிங்ஹாம்ஷயர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய
பணிகுடிமுறை அரசுப்பணி அதிகாரி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
அறியப்படுவதுதிருக்குறளை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
வாழ்க்கைத்
துணை
ஹன்னா பட்டர்வொர்த்
பிள்ளைகள்சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி இங்கிலாந்தின் நார்ஃபோக் மாகாணத்திலுள்ள கிரேட் யர்மவுத்தில் நேதனியல் கிண்டர்ஸ்லி மற்றும் ஜெமிமா விக்ஸ்டெட் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ஹன்னா பட்டர்வொர்த் என்ற பெண்மணியை ஜூலை 3, 1786-இல் மணந்தார். இவரது திருமணம் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தங்கர்நாயக்புரம் என்ற ஊரில் நடந்தது.[3] இவர்களுக்கு சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 5 அக்டோபர் 1792; இறப்பு: 22 அக்டோபர் 1879)[4] மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 1794; இறப்பு: 3 டிசம்பர் 1844)[5] என்ற இரு மகன்கள் இருந்தனர்.

கிண்டர்ஸ்லி 18 பிப்ரவரி 1831 அன்று தனது 68-வது வயதில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் மாகாணத்தில் உள்ள லிட்டில் மார்லோ என்ற ஊரில் இறந்தார்.[6]

படைப்புகள்

தொகு

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 1794-ஆம் ஆண்டில் தனது "ஸ்பெசிமன்ஸ் ஆஃப் ஹிந்து லிட்டரேச்சர்" (Specimens of Hindoo Literature) என்ற நூலில் "வள்ளுவர் குறளின் பகுதிகள் அல்லது, ஞானக் பெருங்கடல்" ("Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom") என்ற அத்தியாயத்தில் முதன்முறையாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதில் குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலின் முதல் சில அதிகாரங்களை மட்டுமே மொழிபெயர்த்து இருந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Place Index - 713 (Tangernaikpuram)". thepeerage.com. The Peerage. n.d. பார்க்கப்பட்ட நாள் 14 March 2019.
  2. Kindersley, Nathaniel Edward (1794). "Specimens of Hindoo Literature: Consisting of Translations, from the Tamoul Language, of Some Hindoo Works of Morality and Imagination, with Explanatory Notes". London: W. Bulmer and Company. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  3. "Nathaniel Edward Kindersley". Geni.com. 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  4. "Kindersley, Richard Torin (KNDY809RT)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  5. "Kindersley, Nathaniel William (KNDY811NW)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  6. Lundy, Darryl (2015). "The Peerage: A genealogical survey of the peerage of Britain as well as the royal families of Europe (Person Page - 56729)". The Peerage. Darryl Lundy, Wellington, New Zealand. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  7. Kindersley, N. E. (1794). "Specimens Of Hindu Literature". பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.

மேலும் பார்க்க

தொகு
  • Henry Davidson Love. (1913). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (4 vols.). New Delhi: Mittal Publications.
  • N. E. Kindersley. (1794). Specimens of Hindoo Literature: Consisting of Translations, from the Tamoul Language, of Some Hindoo Works of Morality and Imagination, with Explanatory Notes. London: W. Bulmer and Company (sold by F. Wingrave, successor to Mr. Nourse). 335 pp.