மைலோ ரங்கல்

(நேதன் ரங்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மைலோ ரங்கல் (பிறப்பு: நேதன் ரங்கல்; 1984) ஓர் அமெரிக்க விலங்குரிமை செயற்பாட்டாளரும் "ஜாய்ஃபுல் வென்ச்சர்ஸ்" நிறுவனத்தின் நிறுவனப் பங்குதாரர் ஆவார். மேலும் அவர் "தி குட் ஃபுட் இன்ஸ்டிட்யூட்" நிறுவனத்தின் இணை நிறுவனரும் "மெர்சி ஃபார் அனிமல்ஸ்" அமைப்பின் நிறுவனரும் முன்னாள் தலைவரும் ஆவார்.

மைலோ ரங்கல்
பிறப்புநேதன் ரங்கல்
ஏப்ரல் 13, 1984 (1984-04-13) (அகவை 40)
செயின்ட் பாரிஸ், ஓகையோ
தேசியம்ஐக்கிய அமெரிக்கர்
பணிவிலங்குரிமை செயற்பாட்டாளர், முதலீட்டாளர்

செயற்பாடுகள்

தொகு

மைலோ ரங்கல் எதிர்காலத்தில் விலங்குகளின் மூலமற்ற தற்சார்புப் புரதங்களில் முதலீடு செய்யும் ஒரு சமூக-தாக்க வென்ச்சர் கேபிடல் முதலீட்டு நிறுவனமான "ஜாய்ஃபுல் வென்ச்சர்ஸ்" நிறுவனத்தின் நிறுவன பங்குதாரராக உள்ளார். அதற்கு முன்னர் இவர் "மெர்சி ஃபார் அனிமல்ஸ்" என்ற விலங்குரிமை அமைப்பை நிறுவினார்.

விலங்கு மூலமில்லா உணவுகளை உற்பத்தி செய்யும் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற நிறுவனமான "தி குட் ஃபுட் இன்ஸ்டிடியூட்" என்ற நிறுவனத்தை இவர் இணைந்து நிறுவினார்.

 
விலங்குப் பண்ணையில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கோழியுடன் ரங்கல்

விலங்குரிமைக்காக சிறப்பாகப் பணியாற்றியதற்காக 2009ல் ரங்கலின் பெயர் அமெரிக்க "விலங்குரிமை புகழ்க்கூடத்தில்" (Animal Rights Hall of Fame) சேர்க்கப்பட்டது.[1]

மேலும் படிக்க

தொகு
  • கரென் இயாக்கப்போ (Karen Iacobbo), மைக்கேல் இயாக்கப்போ (Michael Iacobbo), Vegetarians And Vegans in America Today. கிரீன்வுட் பதிப்பகக் குழு, 2006.

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. "U.S. Animal Rights Hall Of Fame". Animal Rights National Conference. Archived from the original on January 13, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலோ_ரங்கல்&oldid=4050332" இலிருந்து மீள்விக்கப்பட்டது