நேபாள ரூபாய்

ரூபாய் (rupee,நேபாளி: रूपैयाँ) நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 குறியீடு NPR ஆகும். இது பொதுவாக எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

நேபாள ரூபாய்
रूपैयाँ (நேபாளி மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிNPR
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100பைசா
குறியீடுரூ அல்லது அல்லது रू.
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடுரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50,
ரூ. 100, ரூ. 500, ரூ. 1000
 Rarely usedரூ. 1, ரூ. 2, ரூ. 25, ரூ. 250
Coins1, 5, 10, 25, 50 பைசா,
ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10
மக்கள்தொகையியல்
User(s) நேபாளம்
Issuance
நடுவண் வங்கிநேபாள இராஸ்ட்ர வங்கி
 Websitewww.nrb.org.np
Valuation
Inflation7.8%
 Sourceத வேர்ல்டு ஃபக்ட்புக்,
அக்டோபர் 2005.
இரண்டு ரூபாய் நாணயம்

வரலாறுதொகு

நேபாள ரூபாய் 1932இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக வெள்ளியாலான மொகர் வழக்கத்தில் இருந்தது. இரண்டு மொகருக்கு ஒரு ரூபாய் என்ற மாற்றுவீதத்தில் புதிய ரூபாய் வெளியிடப்பட்டது. எனவே நேபாள மக்கள் ரூபாயை மொகுரு என நேபாளியில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு 1993இல் இந்திய ரூபாயுடன் ஒரு இந்திய ரூபாய்க்கு 1.6 நேபாள ரூபாய்கள் என்ற மாற்று விகிதத்தில் பிணைக்கப்பட்டது. [1]

மேற்சான்றுகள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-28 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_ரூபாய்&oldid=3561203" இருந்து மீள்விக்கப்பட்டது