நேபாள வானியலில் பெண்கள்
நேபாள வானியலில் பெண்கள் (Women In Astronomy Nepal) 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[1] வானியல் மீதும் நேபாள நாட்டின் மீதும் ஆர்வமுள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. நேபாள வானியல் சங்கத்தின் ஒரு துணை நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.[2] நேபாள நாட்டின் இளம் பெண்கள் அறிவியல், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு நேபாள வானியல் பெண்கள் நிறுவனம் உதவுகிறது.
திட்டங்கள்
தொகுபுறக்களத்தில் பெண்கள்
தொகுநேபாளத்தில் பெண்கள் / சிறுமிகளின் புறக்கள அறிவியல் நடவடிக்கைகளுக்கு அதிக அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது.[3]
அறிவியல் விருதுகளில் பெண்கள்
தொகுநேபாள மாணவிகள் மற்றும் அறிவியல், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் பணிபுரியும் இளம் நிபுணர்களுக்கு அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த விருது மாணவர் பிரிவு மற்றும் தொழில்முறை பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.[4][5][6][7][8]
வெளியீடுகள்
தொகுநேபாளத்திலும் வெளிநாட்டிலும் உள்ள பெண்களின் பங்களிப்பை உலகளாவிய சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் சுவரொட்டி / புத்தகம் வெளியிட்டு வழிநடத்துகிறது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Women In Astronomy Nepal-WIAN ⋆ Nepal Astronomical Society - NASO" (in en-US). Nepal Astronomical Society - NASO. http://nepalastronomicalsociety.org/wian.
- ↑ "Home ⋆ Nepal Astronomical Society - NASO". Nepal Astronomical Society - NASO (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
- ↑ "Nepal Solar Observation: Volunteers Reach Out With Astronomy | UNAWE". www.unawe.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
- ↑ "UN conference inspires Nepal award for women in science" (in en). UN News. 2017-12-04. https://news.un.org/en/audio/2017/12/638292.
- ↑ (naso), Nepal Astronomical Society (2017-02-21). "Nepal Astronomical Society (NASO): 1st NASO Women In Science Award 2017!". Nepal Astronomical Society (NASO). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
- ↑ "NASO Women In Science Award 2018 – SUKONNA". www.sukonna.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
- ↑ "NASO calls in applications for Women in Science Award 2018" (in en-US). The Himalayan Times. 2018-03-03. https://thehimalayantimes.com/kathmandu/naso-calls-in-applications-for-women-in-science-award-2018/.
- ↑ "Call for Application: Second NASO Women In Science Award 2018 | Glocal Khabar" (in en-US). Glocal Khabar. 2018-02-15. https://glocalkhabar.com/youth/call-for-application-second-naso-women-in-science-award-2018/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nepal Astronomical Society (NASO)". astronomy-nepal.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
புற இணைப்புகள்
தொகு- Women in Astronomy Nepal's Facebook page