நேரியல் சாராக் கட்டுப்பாடு

நேரியல் சாராக் கட்டுப்பாடு (Nonlinear control) என்பது கட்டுப்பாட்டுப் பொறியியலில் ஒரு பகுதிப் பாடமாகும். இது குறிப்பாக நேரியல் சாராமல் மற்றும் காலமாற்றங் கொண்டதுமான கட்டகங்களைப் பற்றிய பாடப் பகுதியாகும். பல வகை நன்கு அறியப்பட்ட பகுப்பாய்வுகளும், வடிவமைப்பு நுட்பங்களும், நேரியல் சார்ந்த கட்டங்களுக்கு உள்ளது. இதை அப்படியே நேரியல் சாராத கட்டகங்களுக்கு பயன்படுத்த முடியாமலும் போகலாம். ஆகையால், நேரியல் சாராக் கட்டுப்பாடு கோட்பாடுகள் எப்படி ஒரு நேரியல் சார்ந்த கட்டங்களை நேரியல் சாராக் கட்டகங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை கற்றுத்தருவதாய் அமைகிறது.