நேரோட்ட - நேரோட்ட மாற்றி

மின் திறனை ஒரு அளவு நேரோட்ட மின்னழுத்தத்தில் இருந்து வேறொரு அளவு நேரோட்ட மின்னழுத்திற்கு மாற்றும் ஒரு கருவி நேரோட்ட - நேரோட்ட மாற்றி அல்லது நேர்-நேர் மாற்றி (DC to DC Converter) ஆகும்.

மின் கருவிகள் அல்லது கருவிகளின் உபசுற்றுக்கள் வெவ்வேறு மின்னழுத்த தேவைகளை கொண்டிருக்கும். ஆனால், பொதுவாக ஒரு தரப்பட்ட நேரோட்ட மின்னழுத்தமே கிடைக்ககூடியதாக இருக்கும். அச்சமயங்களில் நேர்-நேர் மாற்றிகள் கிடைக்கும் மின்னழுத்தம் அளவில் இருந்து தேவைப்படும் அளவுக்கு மாற்ற பயன்படுகின்றன.

மின்ழுத்தப் பங்கிடுவி ஒரு அளவில் இருந்து இன்னொரு அளவுக்கு மாற்ற பயன்படலாம். ஆனால், இவ்வழிமுறைக்கு பாரிய குறைபாடுகள் உண்டு. அவை:

  1. மின்னழுத்தம் ஒழுங்காக்கம் செய்யாதது
  2. சுமையின் அளவு தெரிய வேண்டும்
  3. குறைந்த திறன், கூடிய வெப்ப வெளிப்பாடு
  4. தரப்பட்ட மின்னழுத்துக்கு மீறி கூடிய மின்னழுத்துக்கு மாற்ற முடியாது
  5. எதிர்மறை மின்னழுத்தம் தோற்றவிக்க முடியாது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரோட்ட_-_நேரோட்ட_மாற்றி&oldid=2740334" இலிருந்து மீள்விக்கப்பட்டது