நைட்ரசோவேற்றம்

நைட்ரசோவேற்றம் (Nitrosation) என்பது கரிமச் சேர்மங்களை நைட்ரசோ வழிப்பெறுதிகளாக மாற்றும் ஒரு செயல் முறையாகும். இவ்வழிப்பெறுதிகளில் R-NO என்ற வேதி வினைக்குழு சேர்மத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கா-நைட்ரசோ சேர்மங்கள்

தொகு

நைட்ரசோபென்சீன் போன்றவை கா-நைட்ரசோ சேர்மங்களாகும். ஐதராக்சிலமீன்களை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் இவற்றை தயாரிக்கலாம்.

RNHOH + [O] → RNO + H2O

க-நைட்ரசோ சேர்மங்கள்

தொகு

க-நைட்ரசோதயோல்கள் எனப்படும் க-நைட்ரசோ சேர்மங்கள் தயோல் மற்றும் நைட்ரசு அமிலம் ஆகியனவற்றைச் சேர்த்து ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம் :[1]

RSH + HONO → RSNO + H2O

ஆ-நைட்ரசோ சேர்மங்கள்

தொகு

ஆ-நைட்ரசோ சேர்மங்கள் என்பவை க-நைட்ரசோ சேர்மங்களை ஒத்த சேர்மங்களாகும். ஆனால் இவை குறைந்த வினைத் திறன் மிக்கவையாகும். ஏனெனில் கந்தக அணுவைக் காட்டிலும் குறைந்த அணுக்கருகவர் ஆற்றல் கொண்டதாகும். ஓர் ஆல்ககாலும் நைட்ரசு அமிலமும் வினையில் ஈடுபட்டு ஆல்க்கைல் நைட்ரைட்டு உருவாதல் இதற்கு ஓர் எளிய எடுத்துக் காட்டாகும்.

:ROH + HONO → RONO + H2O. 

நை-நைட்ரசோவமீன்கள்

தொகு

அமீனோ சேர்மங்களுடன் நைட்ரைட்டு மூலங்கள் வினைபுரிவதால் நை-நைட்ரசோ அமீன்கள் உருவாகின்றன. இவை புற்றுநோயாக்கும் சேர்மங்கள் வகையைச் சேர்ந்தவையாகும். இறைச்சி பதப்படுத்தலின் போது இவை உருவாகின்றன. குறிப்பாக ஓர் அமீன் சேர்மத்தின் மீது நைட்ரசோனியம் மின்னணு கவரி தாக்குவதன் வழியாக இவ்வினை நிகழ்கிறது.

NO2 + 2 H+ → NO+ + H2O
R2NH + NO+ → R2N-NO + H+

நை-நைட்ரசோவமீன் உருவாக்கம்:

  நைட்ரசோ அமீன் புரோட்டானேற்றம் வழியாக நீர் மூலக்கூறை இழந்து நேர்மின் சுமையுடைய டையசோனியம் சேர்மமாக உருவாகிறது. வெவ்வேறு வகையான சேர்மங்கள் உருவாக்கத்தில் இது மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wang, P. G.; Xian, M.; Tang, X.; Wu, X.; Wen, Z.; Cai, T.; Janczuk, A. J. (2002). "Nitric Oxide Donors: Chemical Activities and Biological Applications". Chemical Reviews 102 (4): 1091–1134. doi:10.1021/cr000040l. பப்மெட்:11942788. 

புற இணைப்புகள்

தொகு


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரசோவேற்றம்&oldid=2940582" இலிருந்து மீள்விக்கப்பட்டது