நைட்ரேட்டு சோதனை
நைட்ரேட்டு சோதனை (Nitrate test) என்பது ஒரு வேதிப்பொருளில் நைட்ரேட்டு அயனி கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் சோதனையாகும். வேதிப்பொருளின் உலர்நிலையில் மற்ற அயனிகளை எளிதாகக் கண்டறிவது போல நைட்ரேட்டு அயனியைக் கண்டறிவது கடினமாகும். ஏனெனில் எல்லா நைட்ரேட்டுகளும் தண்ணிரில் கரையும். மாறாக, பல பொது அயனிகள் யாவும் கரையாத உப்புகளைத் தருகின்றன. உதாரணமாக, ஆலைடு உப்புக்கள் வெள்ளியுடன் வீழ்படிவைத் தருகின்றன. சல்பேட்டு உப்புகள் பேரியத்துடன் வீழ்படிவைக் கொடுக்கின்றன.
நைட்ரேட்டு எதிர்மின் அயனி ஆக்சிசனேற்றியாகும். இந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டே நைட்ரேட்டு அயனியைக் கண்டறிவதற்கான பல சோதனைகள் உள்ளன. அருங்கேடாக வேதிப்பொருளில் இருக்கும் பிற ஆக்சிசனேற்றிகள் வினையில் உட்புகுந்து தவறான முடிவுகளைக் கொடுக்கலாம்.
வளையச் சோதனை
தொகுநைட்ரேட்டுகளைக் கண்டறிவதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சோதனை பழுப்பு வளையச் சோதனையாகும் [1]. நைட்ரேட்டுக் கரைசலுடன் இரும்பு(II) சல்பேட்டைச் சேர்த்து பின்னர் மெதுவாக அடர் கந்தக அமிலத்தை சேர்க்க வேண்டும். இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் ஒரு பழுப்பு வளையம் தோன்றும். இப்பழுப்பு வளையம் தோன்றினால் அப்பொருளில் நைட்ரேட்டு அயனி இருப்பதாக பொருள் [2]. நைட்ரைட்டு அயனி உடன் கலந்திருந்தால் சோதனை முடிவில் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு [3] இரும்பு(II) வால் நைட்ரேட்டு அயனி ஒடுக்கப்படு, இரும்பு(III) ஆக மாறுவதும் நைட்ரசோனியம் அணைவு உருவாகி நைட்ரிக் ஆக்சைடு NO+ ஆக மாறுவதும் ஒட்டுமொத்த பழுப்பு வளைய சோதனையாகும். . 2HNO3+ 3H2SO4 + 6FeSO4 --->> 3Fe2(SO4)3 + 2NO + 4H2O [Fe(H2O)6]SO4 + NO = [Fe(H2O)5(NO)]SO4+ H2O
தேவர்தா சோதனை
தொகுதேவர்தா கலப்புலோகம் (தாமிரம்/அலும்னியம்/துத்தநாகம்) ஓர் ஒடுக்கும் முகவராகும். சோடியம் ஐதராக்சைடு முன்னிலையில் இது நைட்ரேட்டுடன் வினைபுரிந்து அமோனியாவை வெளிவிடுகிறது. காரமணத்தைக் கொண்டு அமோனியா உற்பத்தியானதை அறிந்து கொள்ளலாம். உலர் நிலையில் சில வாயுக்கள் மட்டுமே நைட்ரேட்டுடன் வினைபுரிந்து அமோனியாவை வெளியிடும்.
3 NO−3 + 8 Al + 5 OH− + 18 H2O → 3 NH3 + 8 [Al(OH)4]−
இவ்வினையில் அலுமினியம் ஒடுக்கும் முகவராகச் செயல்படுகிறது.
டைபீனைலமின் சோதனை
தொகுநைட்ரேட்டு அயனி இடம்பெற்றுள்ள உப்புடன் டைபீனைலமீன் கரைசலையும் கந்தக அமிலத்திலுள்ள அமோனியம் குளோரைடையும் சேர்த்தால் ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து கரைசலில் நீல நிறம் தோன்றும். இதைக் கொண்டு கரைசலில் நைட்ரேட்டு அயனி இருப்பதை அறியலாம். கரிம நைட்ரேட்டுகளைக் கண்டறியவும் இச்சோதனையைப் பயன்படுத்தலாம் [4].
தாமிரத் துருவல்கள் சோதனை
தொகுஅடர்கந்தக அமிலத்துடன் தாமிரத்துருவல்களைச் சேர்த்து நைட்ரேட்டு அயனி இடம்பெற்றுள்ள ஒரு வேதிப்பொருளை சூடுபடுத்தினால் பழுப்பு நிறத்தில் கார மணத்துடன் நுரைத்துப் பொங்கும். நீல லிட்மசு தாள் சிவப்பாக மாறும்.
இங்கு கந்தக அமிலம் நைட்ரேட்டு அயனியுடன் வினைபுரிந்து நைட்ரிக் அமிலம் உருவாகிறது. பின்னர் இது தாமிரத்துருவல்களுடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாகிறது. நைட்ரிக் ஆக்சைடு தேவைப்பட்டால் நைட்ரசன் டை ஆக்சைடாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.
Cu + 4 HNO3 → Cu(NO3)2 + 2 NO2 +2H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Mascetta, Joseph A. Barron's How to Prepare for the SAT II: Chemistry, 7th edition. Barron's Educational Series, Inc., 2002. p208.
- ↑ Holltzclaw, H; Robinson, W. College Chemistry with qualitative analysis, 8th edition, D. C. Heath and Company:Lexington, MA, 1988, p. 1007.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.