நைட்ரோசிலேற்றம்

நைட்ரோசிலேற்றம் (Nitrosylation) என்பது நைட்ரிக் ஆக்சைடு உபகுழுவை மற்றொரு (பொதுவாக ஒரு கரிம) மூலக்கூறுடன் இணைக்கும் சகப் பிணைப்பு வினையாகும். வழக்கமாக கரிம மூலக்கூறுகளில் நிகழும் இவ்வினையை நைட்ரசோயேற்றம் என்றும் அழைக்கலாம். இவ்வினை பெரும்பாலும் நைட்ரசு அமிலம் அல்லது அதற்கு சமமான ஆற்றல் வாய்ந்த சோடியம் நைட்ரைட்டு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றின் கலவையோடு வினைபுரியும் போது நிகழ்கிறது.

N=O குழுவில் "R" என்ற மூலக்கூற்றை இணைக்கும் போது நைத்திரோசிலேற்றம் இடம்பெறுகிறது.

டி.என்.ஏ மூலக்கூறுகளில் இந்த வகை வேதி மாற்றம் நிகழ்வது இல்லை. டி.என்.ஏ. மூலக்கூறுகளை சரிசெய்வதிலும், செல்லுலர் செயல்முறைகளை முறைபடுத்துவதிலும் நைட்ரோசிலேற்றம் உதவுகிறது[1].

மேற்கோள்கள்தொகு

  1. Hayton, T. W.; Legzdins, P.; Sharp, W. B. (2002). "Coordination and Organometallic Chemistry of Metal-NO Complexes". Chem. Rev. 102 (1): 935–991. doi:10.1021/cr000074t. பப்மெட்:11942784. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோசிலேற்றம்&oldid=2690132" இருந்து மீள்விக்கப்பட்டது