நைட்ரோலிக் அமிலம்

நைட்ரோலிக் அமிலங்கள் (Nitrolic acids) என்பவை RC(NO2)=NOH என்ற வேதிவினைக் குழுவைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களாகும். நைட்ரோ ஆல்க்கேனுடன் காரம் மற்றும் நைட்ரைல் மூலங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்து இவற்றை தயாரிக்கிறார்கள் [1]

நைட்ரோலிக் அமிலத்தின் கட்டமைப்பு
RCH2NO2 + HNO2 → RC(NO2)=NOH + H2O.

இம்மாற்றத்தை முதன் முதலில் விக்டர் மேயர் நைட்ரோ ஈத்தேனைப் பயன்படுத்தி கண்டறிந்தார் [2]. நைட்ரோனேட்டு எதிர்மின் அயனியின் இடைநிலை வழியாக இவ்வினை மாற்றம் நிகழ்கிறது.

தோற்றம்

தொகு

பல நைட்ரோலிக் அமிலங்கள் ஆய்வகத் தயாரிப்புகளுக்கு மட்டுமே உட்படுகின்றன. HO2C(CH2)4C(NO2)=NOH அமிலம் மட்டுமே விதிவிலக்காகும். வளைய எக்சனோனுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து இதை தயாரிக்கிறார்கள்.[3]. இச்சேர்மம் அடிப்பிக் அமிலம் மற்றும் நைட்ரசு ஆக்சைடாக சிதைவடைகிறது.

HO2C(CH2)4C(NO2)=NOH → HO2C(CH2)4CO2H + N2O

N2O தயரிப்புக்கான மிகப்பெரிய மரபார்ந்த முறை பாதையாக இவ்வினை மாற்றம் கருதப்படுகிறது. பல நைலான் பலபடிகளுக்கு அடிப்பிக் அமிலம் முன்னோடி சேர்மமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Matt, C.; Wagner, A.; Mioskowski, C., "Novel Transformation of Primary Nitroalkanes and Primary Alkyl Bromides to the Corresponding Carboxylic Acids", The Journal of Organic Chemistry 1997, 62, 234-235. எஆசு:10.1021/jo962110n
  2. Meyer, V.; Locher, J. "Untersuchungen über die Constitution der Nitrolsäuren (Researches on the constitution of the nitrolic acids)" Deut. Chem. Ges. Ber., 1874, volume 7, pp. 670-5. எஆசு:10.1002/cber.187400701211
  3. Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_269.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோலிக்_அமிலம்&oldid=2749792" இலிருந்து மீள்விக்கப்பட்டது