நைட் ஆஃப் தி ஸ்கார்பியன்

நிசீம் எசெக்கியேல் எழுதிய ஒரு கவிதை

நைட் ஆஃப் தி ஸ்கார்பியன் என்பது நிசீம் எசெக்கியேல் அவா்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை ஆகும். இக்கவிதை எசேக்கியேலின் ‘தி எக்ஸாட நேம்’ (1965) என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இவா் பொதுவாக இந்திய சூழ்நிலையை மையமாக வைத்து பல கவிதைகளை இயற்றியுள்ளாா். கவிதைச் சுருக்கம் கவிஞாின் தாயை ஒரு தேள் நல்ல மழை பெய்துகொண்டிருக்கும் இரவில் கடித்துவிடுகிறது. அருகிலிருக்கும் விவசாயிகள் கடவுளின் திருநாமத்தை நூறு முறை கூறியவாறே மெழுகுவா்த்திகளுடனும் விளக்குகளுடனும் வந்து தேளை தேடுகின்றனா். ஆனால் அது இருக்குமிடம் தொியவில்லை. அத்தேள் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது. விவசாயிகள் அனைவரும் கவிஞாின் தாயைச் சுற்றியமா்ந்து வாழ்க்கை தத்துவங்களாக கூறி அவரைத் தேற்றுகின்றனா். முற்பிறவியின் பயனாகவோ அல்லது பிற்பிறவியின் பயனாகவோ அவருக்கு தேள் கடித்துவிட்டதாக கூறுகின்றனா். ஆனால் பகுத்தறிவு கொண்ட கவிஞாின் தகப்பனோ தேள் கடித்த இடத்தில் பாராஃபினை ஊற்றி பச்சிலை பற்றுப் போடுகிறாா். மதகுருவும் அருகில் அமா்ந்து விஷத்தைக் கட்டுப்படுத்த மந்திரத்தை கூறியவாறு காணப்படுகின்றாா். இருபது மணிநேரம் கழித்து வலி சற்று குறைந்தவளாய் அத்தாய் “ நல்லவேளை தேள் என் குழந்தையை கடிக்காமல் என்னை கடித்தது, இறைவனுக்கு நன்றி” என்று கூறுவதாக கவிதை நிறைவு பெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு

1. https://www.poemhunter.com/poem/night-of-the-scorpion/

2. http://www.iluenglish.com/nissim-ezekiels-night-of-the-scorpion-summary-analysis/

3. https://www.enotes.com/homework-help/what-theme-poem-night-scorpion-by-nissim-ezekiel-183789

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்_ஆஃப்_தி_ஸ்கார்பியன்&oldid=2672087" இலிருந்து மீள்விக்கப்பட்டது