நைனா லால் கிட்வாய்
நைனா லால் கிட்வாய் (பிறப்பு 1957) இந்திய வங்கியாளர், பட்டய கணக்காளர் மற்றும் வணிக நிர்வாகி. [1] குழு பொது மேலாளராகவும், எச்எஸ்பிசி இந்தியாவின் தலைவராகவும் இருந்தார். [2] [3] [4] இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ( FICCI ) முன்னாள் தலைவராகவும் உள்ளார். [5]
தொழில்
தொகுகல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை
தொகுடெல்லி மகளிர் பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், 1982ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்றார். [6] [7] ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார் [8] இந்தியாவில் ஒரு வெளிநாட்டு வங்கியின் செயல்பாட்டை வழிநடத்திய முதல் பெண்மணியும் ஆவார்.
விருதுகள்
தொகுகிட்வாய் வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காக புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். [9] வங்கியில் சிறந்து விளங்கியதற்காக ஆல் லேடீஸ் லீக்கின் டெல்லி வுமன் ஆஃப் த டிகேட் சாதனையாளர் விருது 2013 ஐப் பெற்றுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Sheila Dikshit, Shobhana Bhartia and Sharmila Tagore among women achievers honoured". இந்தியா டுடே. 23 July 2013. https://www.indiatoday.in/india/north/story/sheila-dikshit-shobhana-bhartia-and-sharmila-tagore-among-women-achievers-honoured-171358-2013-07-23.
- ↑ "Naina Lal Kidwai: Managing director of HSBC India". Archived from the original on 2013-08-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
- ↑ Naina Lal Kidwai to head HSBC India ops
- ↑ HSBC needs to have one face for its Indian businesses: Kidwai
- ↑ Naina Lal Kidwai - Profile at FICCI Blog
- ↑ Harvard Business School
- ↑ Naina Lal Kidwai: chartered accountant
- ↑ Naina Lal Kidwai Story - Harvard Business School
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.