நொண்டி விளையாட்டு

ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு.

ஆடும் முறைகள் தொகு

ஒருவட்டம் தொகு

வட்டம் போட்டு அதற்குள் ஓடுவர். அவர்களைப் பட்டவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். கால் வலித்தால் வட்டத்துக்கு வெளியே வந்து இரு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். வட்டத்துக்குள் இரு கால்களையும் ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டு வந்து ஓடலாம்.

உள்வட்டம் தொகு

உள்வட்டம் ஒன்று போட்டு அதில் தொடப்பட்டவர்கள் நிற்பர். தொடுபவர் கால் வலிக்கும்போது அவர்களில் ஒருவரைப் பற்றிக்கொண்டு ஒற்றைக்கால் நிலையிலேயே இளைப்பாறிக்கொள்ளலாம். அப்படி இல்லையெனில், உள் வட்டத்தின் உள்ளேயே சில நிமிட ஓய்வுக்கு எதிரி அணியினர் காலால் வட்டம் இட்டு அதனை இட்லி என பெயரிட்டு நொண்டி அடிக்கும் வீரர் மூன்று இட்லி வீதம் ஓய்வு எடுத்து எதிரி அணியினரை தொடலாம்

இரண்டு அணி தொகு

இரண்டு அணிகள். ஒரு அணி கைகளைக் கோத்துக்கொண்டு ஆள்வட்டம் செய்து நிற்கும். அந்த அணியில் ஒருவர் நொண்டி அடித்துச் சென்று உள்ளே ஓடும் மற்றொரு அணியினரைத் தொடுவார். கால் வலிக்கும்போது வட்டத்தில் வந்து கை கோத்துக்கொண்டு அருகில் இருப்பவரை நொண்டி அடித்துச் சென்று தொடச் சொல்லலாம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

கருவிநூல் தொகு

  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம் இடைச்செவல் வெளியீடு, 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொண்டி_விளையாட்டு&oldid=2901188" இலிருந்து மீள்விக்கப்பட்டது